உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபா தேர்தலுக்கு பின் பாரத் அரிசி நிறுத்தம் ஏன்?: சித்தராமையா கேள்வி

லோக்சபா தேர்தலுக்கு பின் பாரத் அரிசி நிறுத்தம் ஏன்?: சித்தராமையா கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ''லோக்சபா தேர்தலுக்காக 'பாரத் அரிசி' அறிமுகப்படுத்தினர். தேர்தல் முடிந்த பின், அதை நிறுத்திவிட்டனர்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரு விதான் சவுதாவில், மறைந்த முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன்ராம் நினைவு நாளில், அவரது சிலைக்கு முதல்வர் சித்தராமையா மாலை அணிவித்தார். பின், அவர் அளித்த பேட்டி: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு கொண்டு வந்த 'அன்ன பாக்யா' திட்டத்தை முடக்குவதற்காக மத்திய அரசு திட்டமிட்டது. மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, லோக்சபா தேர்தலின்போது, 'பாரத் அரிசி'யை அறிமுகம் செய்தது. தேர்தல் முடிந்த பின், அதை நிறுத்திவிட்டனர். அவர்களின் கையிருப்பில் அரிசி இருந்தும், எங்களுக்கு தரவில்லை. ஜெகஜீவன்ராம் விட்டு சென்ற பாதையில் நாம் நடப்போம். பசுமை புரட்சியின் முன்னோடி அவர். சுதந்திரத்துக்கு பின், உணவு துறை அமைச்சராக பதவியேற்ற அவர், நாட்டுக்கு உணவு பாதுகாப்பு வழங்கியவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sundararajan narayanan
ஜூலை 07, 2024 07:49

பாரத் அரிசியின் தரம் குறைவாக உள்ளது. ரேஷன் கடைகளில் 5 கிலோ பைகளில் புழுங்கல், பச்சை அரிசியும், கோதுமையும் வழங்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 07, 2024 04:20

தீம்கா மாதிரியே நாங்களும் வெட்கமில்லாமல் லேபல் மட்டுமே ஒட்டுவோம் என்கிறார்.


venugopal s
ஜூலை 06, 2024 21:01

அடுத்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் மீண்டும் வரும், கவலைப்பட வேண்டாம்! அதுவரை சங்கிகள் மறந்து விடுவார்கள்!


கோபால கிருஷ்ணன்
ஜூலை 06, 2024 22:18

கோவில் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இலவச அரிசி கொடுத்தது இந்த சங்கிகள் அரசு தான்....நினைவிருக்கட்டும்.....!!!


Kumar Kumzi
ஜூலை 06, 2024 22:31

கொத்தடிமையே தேர்தல் வாக்குறுதி கொடுத்தால் அதை நீங்க தான் நிறைவேற்றணும் அதற்கு மத்திய அரசு எதுக்கு கொடுக்கணும்


அப்புசாமி
ஜூலை 06, 2024 20:18

ஜூம்லா கதம் ஹோ கயா... மக்ஜளுக்கு அள்ளிக்குடுக்க பா.ஜ காரங்க என்ன இளித்த வாயன்களா?


ஆரூர் ரங்
ஜூலை 06, 2024 19:23

ஜெகஜீவன்ராம் தான் பத்தாண்டுகளாக வருமானவரி செலுத்தவே மறந்து விட்டதாக பார்லிமெண்டில் ஒப்புக் கொண்டார். அவர் பாதையில் சித்தராமைய்யா செல்ல விருப்பம்.


SANKAR
ஜூலை 06, 2024 19:48

return not filed for ONE YEAR


K.Muthuraj
ஜூலை 06, 2024 18:41

அது தான் காவிரியில் தண்ணீர் தராமல் தாங்களே அனைத்து நீரையும் வைத்து நெல் விளைய வைக்கின்றீர்கள். அதனை வைத்து தங்கள் மக்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே. தமிழக சந்தைகளை தங்கள் அரிசி தானே ஆக்கிரமித்திருக்கிறது. இதிலே மத்திய அரசு தரவில்லை என்று குறையாக்கும்.


கோபால கிருஷ்ணன்
ஜூலை 06, 2024 18:41

பாராளுமன்ற தேர்தலுக்கு பின் மகளிர் உரிமை தொகை ரூ.2000த்தை நிறுத்தியது ஏன்..... சொல்லுங்கள் சித்தராமையா அவர்களே....!!!


P. VENKATESH RAJA
ஜூலை 06, 2024 18:00

பாரத் அரிசி கொடுத்து மக்களுக்கு உழைத்த பா.ஜ சில நாட்களில் மீண்டும் கொண்டு வரும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை