உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்காமல் இருந்தது ஏன்? சித்தராமையாவுக்கு விஜயேந்திரா கேள்வி!

விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்காமல் இருந்தது ஏன்? சித்தராமையாவுக்கு விஜயேந்திரா கேள்வி!

சிக்கபல்லாப்பூர்: ''சித்தராமையாவின் ஆட்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடும் வறட்சியின் போது ஏழு மணி நேரம் மின்சாரம் வழங்காதது ஏன்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கேள்வி எழுப்பினார்.லோக்சபா தேர்தலை ஒட்டி, சிக்கபல்லாப்பூர் மாவட்டம், திப்பூரில், பா.ஜ., 'கிராம பரிக்ரமா' யாத்திரையை, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நேற்று துவக்கி வைத்தார். அவருக்கு கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாட்டு வண்டியில் முக்கிய சாலையில் அழைத்து வரப்பட்டார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர். மாநிலத்தின், 28 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும் என்று மேலிடத்துக்கு உறுதி அளித்துள்ளேன்.

அப்பாவிகள் ஓட்டு

இந்த வகையில், சிக்கபல்லாப்பூர், கோலார் தொகுதிகளில் வெற்றி பெற்று மேலிட தலைவர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும்.விவசாயிகளின் பொருளாதார நிலையை வலுப்படுத்த பிரதமர் பாடுபட்டு வருகிறார். ஆனால், காங்கிரஸ் அரசு அப்பாவி விவசாயிகளின் ஓட்டுகளை பெற்று கேவலம் செய்கிறது.கொரோனா காலத்தில் ஏழைகள் பட்டினியால் அவதிப்பட கூடாது என்பதற்காக, ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசியை பிரதமர் மோடி அரசு வழங்கியுள்ளது. ஆனால், அரிசி தராமல் காங்கிரஸ் அரசு கடன் வாங்கி வருகிறது. இதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும்.தலித் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 11,000 கோடி ரூபாயை, காங்கிரஸ் வாக்குறுதிகளுக்கு அரசு பயன்படுத்தியுள்ளது. தலித்கள் விஷயத்தில் அரசு செய்த மிகப்பெரிய குற்றம் இது.

மானியம் நிறுத்தம்

பாலுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பா.ஜ., ஆட்சி காலத்தில் தான் அமலானது. பால் உற்பத்தியாளர்களுக்கு, காங்கிரஸ் அரசு 715 கோடி ரூபாய் மானியத்தை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.விவசாயிகள் குறித்து, முதலை கண்ணீர் வடிக்கும் முதல்வர் சித்தராமையாவின் ஆட்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடும் வறட்சியின் போது ஏழு மணி நேரம் மின்சாரம் வழங்காதது ஏன்?இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை