உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்

ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்

பாக்பாத் : உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்ததால், 12 அடி உயர ஹோட்டல் கூரையில் இருந்து, அந்த பெண் குதித்து தப்பியோடினார்.உ.பி.,யில் உள்ள பாக்பாத் மாவட்டத்தின் ககோர் கிராமத்தை சேர்ந்த இளைஞர், 2019ல் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்னரே பல ஆண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.இது, திருமணத்துக்கு பின்னும் தொடர்ந்துஉள்ளது. ஆண்கள் தொடர்பை கைவிடுமாறு கண்டித்த கணவரை கொன்று விடுவதாக அந்த பெண் மிரட்டியுள்ளார். இதையடுத்து, கணவர் போலீசில் புகார் அளித்தார். அவர்களுக்கு கடந்த 16ல் போலீசார் கவுன்சிலிங் அளித்தனர்.இந்நிலையில், அன்று பிற்பகலில் காதலன் சோபித்துடன் அந்த பெண் பைக்கில் ஹோட்டலுக்கு சென்றதாக கணவர் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து கணவர் மற்றும் மாமியார் அந்த பெண்ணை தேடி பருட் நகரில் உள்ள ஹோட்டலுக்கு சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஹோட்டலின் மேல், 12 அடி உயரத்தில் உள்ள கூரையில் இருந்து குதித்து தப்பி சென்றார். அந்த பெண் கூரையில் இருந்து குதித்து தப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இதையடுத்து, காதலன் சோபித்தை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ஹோட்டல் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இதற்கிடையே, தன் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதால், போலீஸ் பாதுகாப்பு தரும்படி கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sasidharan
ஜூன் 20, 2025 12:41

சினிமாவில் நடிக்க போகலாம், லேடி ஜாக்கி சான் , நல்ல பெண்மணி நாட்டின் கண்மணி


shakti
ஜூன் 19, 2025 20:19

அந்த ஊரு ராசாத்தி போல ...


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 11:06

சுப வீரபாண்டியன் ஆதரவு தருவாரா? எல்லாவற்றையும் கடந்த உறவாயிற்றே.


suresh guptha
ஜூன் 19, 2025 12:30

SUBA VEERA PANDIAN IF REQUIRES APPOINT ADVOCATE FOR THAT LADY


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 19, 2025 09:21

கள்ளக்காதலில் ஈடுபடுவது ஒருவித மனநலம் குன்றிய நிலையே ....


SIVA
ஜூன் 19, 2025 09:04

இந்த மேடம் ஒலிம்பிக் போனா ஒரு வெண்கல கிண்ணமாவது கிடைக்கும், நல்ல ஐடியா சொன்னா யார் கேட்கிறாங்க ....


Dinesh Pandian
ஜூன் 19, 2025 08:48

கொலையும் செய்வாள் பத்தினி


ashok kumar R
ஜூன் 19, 2025 08:40

காதல் ஒரு பிசாசு காமம் வந்துவிட்டால் பெண்கள் சேயும் அட்டகாசம் கள்ள காதல் .


சண்முகம்
ஜூன் 19, 2025 05:59

உபியில் எல்லாம் நடக்கும்.


பேசும் தமிழன்
ஜூன் 19, 2025 07:42

நம்ம ஊரில் அதை விட மோசமான நிலை தான் உள்ளது..... ஆனால் ஆர் எஸ் பாரதி ஊடகங்கள் அதை மறைக்கும் செயலை செய்கிறார்கள்.


ராஜ்
ஜூன் 19, 2025 15:05

இதே தமிழ்நாட்டில் தான் கள்ள காதலனுக்காக இரண்டு குழந்தைகளை கொன்றவள் இருக்கிறாள் உபி ன்னு உருட்ட வந்துட்டாங்க இந்த உபிங்க


Mani . V
ஜூன் 19, 2025 04:50

காதல் ஸாரி கள்ளக் காதல் என்று வந்து விட்டால் 50 அடியே எங்களுக்கு ஜுஜுபி. எதற்கும் அந்த கணவன் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் கள்ளக் காதலனுடன் சேர்ந்து காலி செய்து விடும்.


Sathyan
ஜூன் 19, 2025 04:17

இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் , ராக்ஷஸி வடிவத்தில்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை