உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விக்கிபீடியாவில் தேடுதல் இந்தாண்டில் 8% குறைந்தது!

விக்கிபீடியாவில் தேடுதல் இந்தாண்டில் 8% குறைந்தது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ.,யில், எந்த விஷயம் குறித்தும் விளக்கம் அளிக்கும் 'சாட்பாட்' அதிகரித்துள்ளதால், விக்கிபீடியாவின் ஆதரவு 8 சதவீதம் சரிவு கண்டுள்ளது.தனது பக்கங்களை பார்வையிடுவோரின் எண்ணிக்கை, இந்த ஆண்டில் இதுவரை 8 சதவீதம் குறைந்துள்ளதாக, விக்கிபீடியாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏ.ஐ., தேடுதல் கருவிகள் அதிகரித்திருப்பதும், பயனாளர்களின் வழக்கம் மாறியிருப்பதும் இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. ஏ.ஐ., தளங்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் சந்தேகங்களுக்கு அதிகளவில் பதில் அளிக்கப்படுவதால், பயனாளர்கள் விக்கிபீடியோவை நாடுவதை குறைத்திருக்கின்றனர்.இளைய தலைமுறையினர் நேரடியாக சமூக வலைதள வீடியோ பக்கங்களை அதிகம் நாடுவதாகவும், ஏ.ஐ., தளங்களில் விளக்கம் கேட்பவர்களுக்கான பதிலை விக்கிபீடியா ஆதாரங்களை எடுத்து சாட்பாட்கள் பதிலளிப்பதாகவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், அதிக மொழிகள், கூடுதல் தகவல்களுக்கு விக்கிபீடியா தொடர்ந்து முக்கிய ஆதாரமாக விளங்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Padmasridharan
அக் 23, 2025 05:55

இதில் தங்கள் பெயர்கள் வரவேண்டுமென்றுதானே பல நடிகர்களும் அரசியலில் நுழைந்துள்ளனர். எத்தனை பிள்ளைகளென்று குறிப்பிடும் விக்கிபீடியா ஆண்கள் பெண்கள் என்று குறிப்பிடுவதில்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரி பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுவதில்லை. படித்த வாக்கியங்களையே திரும்ப திரும்ப சிறு சிறு தலைப்புகளின் கீழ் கொடுக்கின்றனர். சில மாறுதல்களை இவர்கள் கொண்டு வரவேண்டும் சாமி.


Perumal Pillai
அக் 21, 2025 13:20

விக்கிப்பீடியா திமுக முரசொலி போல மிக நம்பிக்கைக்குரியது .


kirija
அக் 21, 2025 11:31

விக்கிபீடியாயை ஒழிக்க வேண்டும் அதன் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை