உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காட்டு யானை ஆவேசம்; உயிர் தப்பிய சுற்றுலா பயணி

காட்டு யானை ஆவேசம்; உயிர் தப்பிய சுற்றுலா பயணி

கூடலூர்: கர்நாடக பந்திப்பூரில் அத்துமீறி செல்போனில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப் பயணியை காட்டு யானை துரத்திச் சென்று தாக்கியது. இதில், சுற்றுலா பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம். இவ்வழியாக மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நேற்று மாலை பந்திப்பூர் மைசூரு சாலையோரம் நின்றிருந்த காட்டு யானையை, சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி பார்த்துக் கொண்டிருந்தனர். பல சுற்றுலா பயணிகள் கீழே இறங்கி, அதனை படம் எடுக்க முயற்சித்து இடையூறு செய்தனர்.மேலும், வாகனங்கள் சுற்றுலா பயணிகள், அதிக அளவில் கூடியதால் ஆக்ரோஷம் அடைந்த யானை, திடீரென சாலையை கடந்து சென்றது. அப்போது சுற்றுலா பயணிகள் ஒருவர் யானையை பின் தொடர்ந்து ஓடினார். இதனால், ஆக்ரோஷம் அடைந்த யானை, அவரை துரத்தியது. அதனிடமிருந்து தப்பிக்க சாலையை நோக்கி ஓடினார். ஆனால், யானை அவரை துரத்தி சென்று சாலையில், கீழே தள்ளி தாக்கியது. சக சுற்றுலா பயணிகள் சத்தமிட்டு, யானையை விரட்டினர்.யானை தாக்கியதில் சுற்றுலா பயணிகள் படுகாயம் அடைந்தார். அவரை சுற்றுலா பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக, குண்டல்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேலும், தீவிரப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

A.Muralidaran
ஆக 11, 2025 13:48

எந்த உயிரினமும் தன் குட்டியை அடுத்தவர்களை நெருங்க விடாது.


Ramesh Sargam
ஆக 11, 2025 11:34

உங்க வீட்டுக்குள்ள ஒரு கரப்பான் பூச்சி வந்தாலே துரத்தறீங்களே. உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது மிருகங்கள் வசிக்கும் இடத்திற்கு போய் அவைகளை தொந்தரவு செய்ய...?


Venkatesan Srinivasan
ஆக 11, 2025 22:37

அந்த மனிதன் எவ்வளவு புத்தி அற்றவன். நாம் வசிக்கும் இடம் அருகில் யானைகள் வந்தால் நமக்கு எவ்வளவு இடைஞ்சல் என்று நினைக்கின்றோம். அதுபோல அவைகள் இருக்கும் இடத்தில் நாம் சென்றால் அவைகளும் அப்படி தான் எண்ணும். சாதாரண பொது அறிவு இல்லாமல் அவ்வளவு பெரிய மிருகத்தை பின் தொடர்ந்து புகைப்படங்கள் எடுக்க முயற்சி செய்வது முட்டாள்தனம். இதற்காகவே இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை