உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால நிபந்தனை ஜாமின்

நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால நிபந்தனை ஜாமின்

பெங்களூரு: பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கி, கர்நாடகா ஐகோர்ட் உத்தரவிட்டது.சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. என்பவர், நடிகர் தர்ஷனின் நெருங்கிய தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக வந்த புகாரில் ரேணுகாசாமி ஜூன் 09-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தர்ஷன் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.இந்நிலையில் நடிகர் தர்ஷன் ஜாமின் கோரி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது இறுதி கட்ட விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் (அக்14ம் தேதி) நடந்த விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெய்சங்கர் உத்தரவிட்டார்.இதனை எதிர்த்து பெங்களூரு ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனுவில் தனக்கு கடுமையான முதுகுவலி இருப்பதால், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள இடைக்கால ஜாமின் உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், தர்ஷனுக்கு 6 மாத காலம் இடைக்கால ஜாமின் வழங்கினர்.* எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பதை தெரிவிக்க வேண்டும். * ஒரு வாரத்திற்குள் தர்ஷன் சிகிச்சை பெறும் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். * பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். சிகிச்சை தவிர வேறு விஷயங்களில் ஈடுபடக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramasamy Chakravarthy
அக் 30, 2024 13:14

6 வாரம் 6 மோந்த்ஸ் இல்லை


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 30, 2024 12:33

சிகிச்சையை சிறையிலேயே மேற்கொள்ளக்கூடாதா? குப்பன் சுப்பனுக்கும் இந்தச்சலுகை கிடைக்குமா? ஊழல் மலிந்த துறைகளில் நீதித்துறை முதல் துறையாக உள்ளது ........


பிரேம்ஜி
அக் 30, 2024 08:27

ஜாமீன் மட்டுமா? விரைவில் விடுதலையே கிடைக்கும். நடிகர், அரசியல்வாதி, பணக்காரர்களுக்கு கொலை செய்தாலும், கொள்ளை அடித்தாலும் தண்டனை வழங்கப்படாது! ஆடு திருடினவன், பிக்பாக்கெட் அடித்தவன் இவர்களுக்கு உடனே தண்டனை உண்டு! இதுதான் இந்திய சட்ட நடைமுறை.


Kasimani Baskaran
அக் 30, 2024 05:25

அதற்காக செபா போல இதய மாற்று அறுவைச்சிகிச்சையெல்லாம் செய்ய மாட்டார்கள்.


rama adhavan
அக் 30, 2024 08:21

இதயம் அற்றவர்களுக்கு எப்படி இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலும்?


rama adhavan
அக் 30, 2024 05:20

கண்டிப்பாக கிடைக்காது. உச்சநீதி மன்றம் வரை போக வேண்டும் உச்ச நீதிமன்றம் தான் ஜாமீன் ஒருவரது உரிமை என்று சொல்லிக்கிட்டு உடனே கொடுக்கும்.


RAJ
அக் 30, 2024 04:14

ஜாமீன் குடுத்தால், நம் உடைய கோர்ட்டுகளை கோமாளி கூடங்களாக மாற்றிவிடலாம்.


முக்கிய வீடியோ