உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னர் ஆகிறார் அஜித் தோவல்?

கவர்னர் ஆகிறார் அஜித் தோவல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் அஜித் தோவல். 80 வயதாகும் இவர் ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர். மோடி முதன் முறையாக பிரதமரான, 2014லிருந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் உள்ளார்; மத்திய அமைச்சர் அந்தஸ்தில் இருப்பவர்.கேரள கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். மோடியின் நம்பிக்கைக்கு உரியவர்; இந்தியாவின் பாதுகாப்பிற்காக பல வீரதீரச் செயல்களில் ஈடுபட்டவர்.இவர், சமீபத்தில் மும்பை சென்று, மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிசை சந்தித்தார். 'அஜித் தோவலை வரவேற்கிறேன்' என தன், 'எக்ஸ்' தளத்தில் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்தார் பட்னவிஸ். இது, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q2un4r7u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'வயதாகிவிட்ட தோவலுக்கு உடல் ரீதியான பல பிரச்னைகள் உள்ளதாம். ஆனாலும், இவரை விட்டுவிட பிரதமர் விரும்பவில்லை. எனவே, இவருக்கு கவர்னர் பதவி அளிக்க மோடி முடிவு செய்துள்ளார்' என, கிசுகிசுக்கப்படுகிறது. 'மஹாராஷ்டிர கவர்னர் பதவி இவருக்கு கிடைக்கும்; அதனால்தான், முதல்வரை சந்தித்து உள்ளார்' என்கின்றனர்.'அப்படியானால் தற்போது மஹாராஷ்டிர கவர்னராக உள்ள, சி.பி.ராதாகிருஷ்ணன் என்ன ஆவார்?' என்றால், 'அவர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது' என, சொல்லப்படுகிறது.'பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது. அதற்கு முன்பாக, கவர்னர்கள் மாற்றம், புதிய கவர்னர்கள் நியமனம் நடக்கலாம்' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

நாஞ்சில் நாடோடி
ஜூன் 19, 2025 14:44

தமிழக தேசபக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம், வீரத்திருமகன் அஜித் தோவல் அவர்களை...


spr
ஜூன் 17, 2025 17:35

இது உண்மையானால், பாராட்டுவோம். ஆனால் அடுத்து யார் இவரை போல பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருப்பார் என்றொரு கேள்வி எழுகிறதே ? இதன்மூலம் ஆளுநர் பதவி ஒய்வு எடுப்போருக்கான பதவி என்றொரு எண்ணம் வந்தால் என்ன செய்ய!!!


Vijayaraghavan L
ஜூன் 17, 2025 09:47

This is their mindset


R MANIVANNAN
ஜூன் 16, 2025 13:20

அந்த பயம் இருக்கட்டும்


K V Ramadoss
ஜூன் 16, 2025 12:55

அப்துல் ரஹீம் வேற என்ன சொல்லுவார்.. பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டிய இவனுகளை இங்கே வைத்திருந்தால் நம் நாட்டுக்கு விரோதமாக இப்படித்தான் பேசுவாங்க..


Pudhuvai Paiyan
ஜூன் 16, 2025 05:21

நீங்களும் குடும்பத்துக்கு உழைக்காமல் அப்பாவுக்கு மட்டும் உதவுகிறீர்கள்


Thiyagarajan R
ஜூன் 15, 2025 21:04

வா தலைவா வா.... தேச துரோகிகள் கதறட்டும்


Abdul Rahim
ஜூன் 15, 2025 18:14

மோடிசாரின் பினாமியான இவரும் மகனும் சேர்ந்து வாங்கினங்களே கரீபியன் தீவுகள் அங்க போடுங்க. கெவெர்னரா ஊழல் பண்ணி வாங்கிய தீவுக்கு கெவெர்னரா போறது அவருக்கு ரொம்ப பிடிக்குமே ...


Pudhuvai Paiyan
ஜூன் 16, 2025 05:25

நீங்கள் சாட்சி கையொப்பம் இட்டு அந்த இடத்தை வாங்கும்போது சரியான கமிஷன் கிடைக்கவில்லையா


Abdul Rahim
ஜூன் 16, 2025 09:32

புதுச்சேரில நீங்க மட்டும்தான் இப்படியா இல்ல எல்லாமே இப்படித்தானா


venugopal s
ஜூன் 15, 2025 15:27

இவர் நாட்டுக்கு உழைத்ததை விட பாஜகவுக்கு அதிகம் உழைத்திருக்கிறார். அதற்கான பரிசு தான் இந்த ஆளுநர் பதவி!


XXXX
ஜூன் 15, 2025 15:26

CONGRATULATIONS


சமீபத்திய செய்தி