உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னர் ஆகிறாரா கட்கரி?

கவர்னர் ஆகிறாரா கட்கரி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி அரசியல் வட்டாரங்களில் வதந்திகளுக்கு பஞ்சம் கிடையாது. தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சம்பந்தப்பட்டது. இவர் ஓரம் கட்டப்பட்டுவிட்டார். மத்திய அமைச்சர்கள் சிலர் கவர்னர்களாக அனுப்பப்பட உள்ளனர். அந்த பட்டியலில் கட்கரி பெயரும் உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலந்து பயன்படுத்த வேண்டும் என, ஒரு திட்டத்தை நாடு முழுதும் செயல்படுத்தினார் கட்கரி. இதனால் பெட்ரோல் இறக்குமதி குறையும். சுற்றுச்சூழல் மேம்படும். கரும்பு விவசாயிகள் பயனடைவர் என்பது கட்கரியின் வாதம். இதனால், கட்கரிக்கு எதிராக செய்திகள் வர ஆரம்பித்தன. இவருடைய இரண்டு மகன்களும் எத்தனால் தொழிற்சாலை நடத்துகின்றனர். அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார் என செய்திகள் வெளியாகின.'எனக்கு எதிராக பெட்ரோல் லாபி செயல்படுகிறது. என் மகன்கள் தொழிற்சாலை நடத்துவது உண்மைதான். அவர்களுக்கு நான், 'அட்வைஸ்' மட்டுமே செய்கிறேன். எத்தனால் விவகாரம் குறித்து முடிவெடுப்பது மத்திய அமைச்சரவை தான்' என, விளக்கம் அளித்துள்ளார் கட்கரி.தன் சொந்த ஊரான நாக்பூரிலேயே கடந்த ஒரு வாரமாக தங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம் நடைபெறும். அப்போது கட்கரி மாற்றப்படுவார் என மீடியாவில் செய்திகள் கசியவிடப்படுகின்றன.ஏற்கனவே மோடிக்கும், கட்கரிக்கும் ஆகாது என சொல்லப்படுகிறது. ஆனால், இவருக்கு ஆர்.எஸ்.எஸ்., பலத்த ஆதரவு அளித்து வருகிறது. எனவே, கட்கரி மீது மோடி கை வைக்க மாட்டார் எனவும் ஒரு சாரார் சொல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mahendran Puru
செப் 28, 2025 21:49

அடுத்த விக்கெட் டவுன். யாராவது 75 வயசு ஆச்சே, பதவி விலகுன்னு சொல்வீங்க?


Sridhar
செப் 28, 2025 16:29

இவர் ரோடு போடுவதிலேயே கவனம் செலுத்தியிருக்கலாம். அவர் துறையை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாத பெட்ரோலிய துறை விஷயங்களில் ஏன் மூக்கை நுழைத்தாரோ தெரியவில்லை. சமீப காலங்களில் சாலைகளிலும் நிறைய குறைபாடுகள் தெரிவிக்கப்படுகிறது. தன மகன்களை எத்தனால் வியாபாரம் செய்ய விட்டுட்டு இவர் வாயை மூடிக்கொண்டு இருந்திருந்தால், விஷயம் வெளிவந்திருக்காது. இவர் எதோ பெட்ரோலிய துறையின் மந்திரி போல எத்தனால் பற்றி அறிக்கைகள் ஏன் விடவேண்டும்? எத்தனாலுக்கு gst வரி வேறு கட்டாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிக்க வழிவகை வேறு செய்திருக்கிறார். எத்தனாலின் விலை குறைவு எனும்போது அதை கலப்பதனால் வரும் லாபத்தை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதுதான் முறை. அதை இவர் செய்யவில்லை. இவர் முழுநேர வியாபாரியாக மாறலாம்.


SUBBU,MADURAI
செப் 28, 2025 14:58

இந்த அனுகூல சத்ருவை அத்வானியை ஓரம் கட்டியது போல் ஒதுக்கி தள்ளிவிட வேண்டும் இவரும் நம் சோழவந்தான் சுப்பிரமணிய சாமியும் ஒரே குணத்தை கொண்டவர்கள் அதாவது கூட இருந்தே குழி பறிக்கும் எண்ணம் கொண்டவர்கள் ஆகவே இவரை இத்தோடு கழட்டி விடுவது பாஜகவிற்கு நல்லது


Kumar
செப் 28, 2025 11:46

அடடே எவ்வளவு கரிசனம் பாவம்


Kasimani Baskaran
செப் 28, 2025 09:41

சாலைப்போக்குவரத்தில் சாதனை செய்தவர். எத்தனால் விஷயத்தில் நிபுணர்களை கலந்தாலோசித்து சொல்லியிருக்கலாம். எல்லா பெட்ரோல் என்ஜின்களும் எத்தனால் கலந்த பெட்ரோலில் நீண்டகால அடிப்படையில் வேலை செய்யும் என்று சொல்லி விட முடியாது.


veeramani
செப் 28, 2025 09:16

நிதின் கட்காரி ..... ஒரு தேர்ந்த அரசியல்வாதி .. ஜென்டில் மான் ... இன்னும் அடுக்கலாம் கட்காரி பிரதமர் ஆகலாம். சரியான தகுதி உண்டு .


vbs manian
செப் 28, 2025 09:06

அருமையாக செயல்படும் ஒருவர். நெடும்சாலை துறையில் அற்புதங்கள் செய்தவர். இந்தியாவின் முகம் மாறியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. நல்லவர்களுக்கு காலம் இல்லை.


Indian
செப் 28, 2025 08:42

பிரதமர் ஆக பட வேண்டிய ஆள், சதிவலையால் கவர்னர் ஆக மாற்றப்படுகிறார். இவர் அல்லது ராஜ்நாத் சிங் பிரதமர் அனால் நானும் பா ஜா வுக்கு வோட்டு போடுவேன் .


Moorthy
செப் 28, 2025 08:20

கட்கரி நாக்பூரை சேர்ந்தவர் மோடி எதிர்ப்பாளர் ஆனால் மோடி நினைத்தால் கட்கரி கவர்னர் ஆக்கப்படுவார் ஆர் எஸ் எஸ் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை