உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா: ஒரு இடம், ஐந்து அணிகள் போட்டி

அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா: ஒரு இடம், ஐந்து அணிகள் போட்டி

புதுடில்லி: உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுவதில் இந்திய பெண்கள் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டி முடிவில் ஆஸ்திரேலியா (9), இங்கிலாந்து (9), தென் ஆப்ரிக்க அணிகள் (8) அரையிறுதிக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்க இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் உட்பட ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன.

இந்தியா எப்படி

இந்திய பெண்கள் அணி இதுவரை 5 போட்டியில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளி (ரன் ரேட் 0.526) மட்டும் பெற்று, பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அடுத்து நியூசிலாந்து (அக். 23), வங்கதேச (அக். 26) அணிகளை சந்திக்க உள்ளது. இந்த இரு போட்டியில் வென்றால் 8 புள்ளியுடன் அரையிறுதிக்கு முன்னேறலாம். மாறாக ஏதாவது ஒரு போட்டியில் தோற்க நேரிட்டால், 6 புள்ளியுடன், மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

தேறுமா நியூசி.,

நியூசிலாந்து அணி 5 போட்டியில் 1 வெற்றியுடன் 4 புள்ளி எடுத்து 5வதாக உள்ளது. அடுத்து இந்தியா (அக். 23), இங்கிலாந்து (அக். 26) அணிகளை எதிர்கொள்ள உள்ளது. இந்த இரு போட்டியில் வென்றால் இந்தியாவை பின்தள்ளி, அரையிறுதிக்கு செல்லும். மாறாக ஏதாவது ஒன்றில் தோற்றால், மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இலங்கை, வங்கதேச அணிகள் 5 போட்டியில் தலா 2 புள்ளி எடுத்துள்ளன. மீதமுள்ள இரு போட்டிகளில் வெல்லும் அணி 6 புள்ளி பெறும். பின் மற்ற போட்டி முடிவுக்கு ஏற்ப அரையிறுதி வாய்ப்பு தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M. PALANIAPPAN, KERALA
அக் 21, 2025 15:49

இங்கிலாந்து அணியுடன் சுலபமாக ஜெயிக்க வேண்டிய மேட்ச் ஆகா இருந்தது, அனால் அதை இந்தியா இழந்தது. ஒற்றை ரன்களை எடுக்க தவறிவிட்டார்கள், பெரிய ஷாட் அடிக்க முயன்று தோல்வியை தழுவினார்கள். மேட்ச் யை இறுதியில் நல்ல வண்ணம் முடிக்க கூடிய ஹாட் ஹிட்டர் யாரும் இல்லை . இனிவரும் மேட்ச் நல்லவண்ணம் விளையாடி வெற்றி பெற வாழ்த்துக்கள்


Modisha
அக் 21, 2025 13:23

இங்கிலாந்து அணி வேண்டும் என்றே இந்திய விக்கெட்டுகளை சரித்தது , பவுண்டரிகளை தடுத்தது . அம்பயர்கள் இதை கண்டிக்கவில்லை .


Senthoora
அக் 21, 2025 16:56

நாங்களும் பார்த்தோம் அப்படி நடக்கவில்லை, ஆடத்தெரியாவிட்டால் மேடை சரி இல்லை என்று சொல்லக்கூடாது.


Arjun
அக் 21, 2025 11:29

இங்கிலாந்துடன் எளிதாக வெற்றி பெற வேண்டியது பெரிய ஷாட்க்கு போய் விக்கெட்டை பறி கொடுத்து தோல்வியை தழுவியது


Field Marshal
அக் 21, 2025 10:25

ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுடன் அதிர்ச்சி தோல்வி


Senthoora
அக் 21, 2025 16:59

இந்தியாவுடன் ஆஸ்திரேலியா வெற்றி, அதுக்கு இது சரி வருமா, முதலில் தாய் நாட பாருங்க .


Vasan
அக் 21, 2025 07:42

இந்தியா, நியூசிலேன்ட், இலங்கை, வங்கதேசம் உட்பட 5 அணிகள் என்றால், விட்டு போன அணி எது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை