உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாமாகவே புதிய சட்டத்தை கண்டுபிடிப்பதா? உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தாமாகவே புதிய சட்டத்தை கண்டுபிடிப்பதா? உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'தண்டனையில் பாதியை அனுபவித்த பிறகே, தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான மனுவை தாக்கல் செய்ய முடியும்' என, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ம.பி.,யைச் சேர்ந்த ஒருவர் லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, ம.பி., உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'மனுதாரரின் பாக்கெட்டில் இருந்து லஞ்சப் பணம் சிக்கியது பற்றி விளக்கம் தரப்படவில்லை. முதல் மனுவை நிராகரித்த குறுகிய நேரத்தில் இரண்டாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மனு தாக்கல் செய்யப்படவில்லை. தண்டனையில் பாதியை அனுபவித்த பிறகே, தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான மனுவை தாக்கல் செய்ய முடியும்' என உத்தரவிட்டது. வித்தியாசமான இந்த தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு, ம.பி., உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, ஒன்பது மாதமாக சிறையில் இருக்கும் அந்த நபருக்கு நேற்று ஜாமின் வழங்கியது. மேலும், 'எந்தவித அடிப்படையும் இல்லாமல், புதிய சட்ட விதியை, தாமாகவே ம.பி., உயர் நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கிறதா?' என கண்டனம் தெரிவித்தது. நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது:சாதாரண குற்ற வழக்குகளில் தண்டனையை நிறுத்தி வைக்கலாம்; விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களில் மட்டுமே ஜாமின் மனுவை அனுமதிக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் 1999-ல் தீர்ப்பளித்திருக்கிறது. இதுபோன்ற ஏராளமான உத்தரவுகள் உள்ள நிலையில், புதிய சட்ட விதியை ம.பி., உயர் நீதிமன்றம் கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் இதுபோன்ற 'அறிவுசார் நேர்மையின்மை' காரணமாக, உச்ச நீதிமன்றம் நோக்கி மனுதாரர் தள்ளப்பட்டுள்ளார். உயர் நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க முடியாவிட்டால், குற்றவாளிக்கு ஜாமின் வழங்கலாம்.பல தீர்ப்புகள் இருந்தபோதிலும், சாதாரண சட்ட மீறல் வழக்குகளில் ஜாமின் வழங்க கீழ்நீதிமன்றங்கள் தயங்குவதால், ஒவ்வொருவரும் உச்ச நீதிமன்றம் வருகின்றனர். இதன் விளைவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து, பணிச்சுமை அதிகரிக்கிறது. இங்குள்ள வழக்குகளில் 40 சதவீதம், கீழ்நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களிலேயே தீர்க்கப்படக் கூடியவை.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

Marimuthu Veeranan
ஏப் 21, 2025 00:04

ஜனாதிபதிக்கும் கவர்னருக்கும் அவர்களுக்கு எதிராக எந்த சட்டம் அவர்களை தண்டிக்க முடியாது என்று தெரிந்த போதும் அவர்களுக்கு எதிராக உத்தரவு ஆணை பிறப்பித்த நீங்கள் புதிய சட்ட விதிகளை பச்ச மன்ற நீதிபதிகள் நீங்கள் பயன்படுத்தும் போது அது புதிதாக உங்களுக்கு தெரியவில்லையா.... எல்லோருக்கும் சட்டம் சமம் என்கிற போது உச்ச மன்ற நீதிபதி கோடிக்கணக்கில் பணத்தை எரித்ததற்கு என்ன தண்டனை உச்ச மன்ற நீதிபதிவுக்கு எந்த சட்டமும் பொருந்தாதா....??? அவருக்கு தண்டனை ஏதும் கிடையாதா...???


Marimuthu Veeranan
ஏப் 20, 2025 23:51

சரியா சொன்னீங்க.....


V.Mohan
ஏப் 20, 2025 14:45

புதுசு புதுசா சட்ட விதிகளை கண்டுபிடிக்கிறாங்க உயர்நீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் என்பதாக சொல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகளே அவிங்க உங்க கிட்ட இருந்துதான் இதுமாதிரி செய்ய கத்துக்கிறாங்க ஏன் ஐயா, 1975 எமர்ஜென்சி நேரத்துல, பாராளுமன்றம் செயல்படாத போது, சர்வாதிகாரி இந்திரா காந்தி, திருட்டுத்தனமாக, இந்தியா இந்து நாடு அல்ல என்பதாகவும், மதச்சார்பற்ற நாடு எனவும் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி எழுதினார். இந்த செயல் தவறு என்பதால் இந்த திருத்தங்களை நீக்க வேண்டும் என்று கேஸ் போட்டால் , சட்டதிற்கு புறம்பாக திருத்தியது தவறு,என்று சொல்ல நெஞ்சுத்துணிவும் நேர்மையும் இல்லாமல், திருத்தம் நல்லது தானே என புது கண்டுபிடிப்பாக தீர்ப்பு சொல்லும் அதி மேதாவிகளை தான் முன்னுதாரணமாக கொண்டிருப்பார்கள் என தோன்றுகிறது.


Subash BV
ஏப் 20, 2025 11:47

Yes at times people think beyond and loose like this. In financial issues they ask to deposit half the value before you claim not guilty. End of the day, will loose or gain your money. But not if you go to Jail. DONT USE THUMB RULES. BE ALERT.


Kanns
ஏப் 20, 2025 09:36

Stop Lectures. Start Punishing Errant Judges Misusing Justice-Courts-Laws Not Giving UnBiased-Fast-Quality-CheapCost Judgements And Not Punishing Any Power-Misusing RulingPartyGovts-Stooge Officials esp Investigator-Police-Judges& Bureaucrats-BiasedMedia-VoteHungry Parties, PowerHungry Gangs incl Grave False Complainants


Mecca Shivan
ஏப் 19, 2025 19:54

அப்புறம் பொன்முடிக்கு கொடுத்த தீர்ப்பு தப்புன்னு ஆகிவிடாதா


S.jayaram
ஏப் 19, 2025 16:43

அவ்வாறு பேசித்தீர்க்கப் படவேண்டிய விசயங்களில் ஈகோ காரணமாக மக்கள் அலைக்களிக்கப்படுகின்றனர் இதுதான் தமிழ்நாட்டில் தற்போது கவர்னர் , ஸ்டாலின் இடையே நடந்துள்ளது அது உச்சநீதிமன்றத்தில் போய் ஒரு அதிகாரப் பிரச்சினையை கிளப்பி உள்ளது


Anantharaman Srinivasan
ஏப் 19, 2025 15:29

அரைகுறை சட்ட ஞானமுள்ளவர்கள் அரசியல் பின்புலத்தால் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது இதனால் நிருபணமாகிறது.


Barakat Ali
ஏப் 19, 2025 13:39

அமைச்சரவையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உடனடியாக ஏற்கவோ மறுக்கவோ ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் எந்த விதமான வழிகாட்டுதல்களும் இதுவரை இல்லாமலிருந்தது .... ஜனாதிபதியின் அதிகார வரம்பில் குறுக்கிட்டு நீங்கள் உத்தரவு பிறப்பித்தீர்கள் .... கவர்னர் மனுக்களைப்போட்டுவிட்டு அதன் மீது காலவரையின்றி அமர்ந்துகொள்ளக்கூடாது ன்னு புச்சு புச்சா கண்டுபிடிக்க உங்களுக்கு உரிமை உண்டுங்களா ????


Ramesh Sargam
ஏப் 19, 2025 13:12

தாமாகவே புதிய புதிய சட்டங்களை கண்டுபிடிப்பவர்களை உச்சநீதிமண்டம் கண்டிக்கவேண்டும், மீறினால், தண்டிக்கவேண்டும். மேலும் உயர் நீதிமன்றங்களாக இருக்கட்டும், உச்சநீதி மன்றமாக இருக்கட்டும், சட்டம் என்பது எல்லோருக்கும் பொது என்கிற அடிப்படையில், குற்றம் செய்தவன் ஏழையோ, பணக்காரனோ அல்லது அரசியல்வியாதியோ, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் மூலம் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். பிக்பாக்கெட் போன்ற சிறிய குற்றங்கள் செய்பவர்கள் ஓரிரு நாட்களில் தண்டிக்கப்படுகிறார்கள். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, ஊழல் செய்யும் பெரிய பெரிய குற்றவாளிகள் அவ்வளவு துரிதகதியில் தண்டிக்கப்படுவதில்லை. ஏன்? சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதானே?


புதிய வீடியோ