உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குமாரசாமி ராஜினாமா செய்வாரா? கேட்கிறார் ஜி.டி.தேவகவுடா!

குமாரசாமி ராஜினாமா செய்வாரா? கேட்கிறார் ஜி.டி.தேவகவுடா!

மைசூரு: ''வழக்கு பதிவு செய்ததும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், மத்திய அமைச்சர் குமாரசாமி மீதும் வழக்கு உள்ளது. அவர் ராஜினாமா செய்வாரா,'' என்று, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா கேள்வி எழுப்பினார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:முதல்வர் சித்தராமையாவின் எதிர்காலம் நன்றாகவே உள்ளது. அவரை போன்று அதிர்ஷ்டசாலி அரசியல்வாதி யாருமே இல்லை. கடந்த 1983ல் அவர் தற்செயலாக எம்.எல்.ஏ., ஆனார். இப்போது முதல்வராக உள்ளார். சிவகுமார் என்றாவது ஒரு நாள் முதல்வர் ஆவார். அது எப்போது என்று எனக்கு தெரியாது.முதல்வர் ஆவதற்கு சித்தராமையாவின் ஆதரவு சிவகுமாருக்கு தேவை. வெறும் 10 எம்.எல்.ஏ.,க்களை வைத்து கொண்டு யாரும் முதல்வராக முடியாது. காங்கிரஸ் அரசு கவிழும்; சித்தராமையா ராஜினாமா செய்வார் என்று, பா.ஜ., தலைவர்கள் பேசும் போது மக்கள் கோபம் அடைகின்றனர்.முடா வழக்கில் சித்தராமையா மீது வழக்கு பதிவானது; அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் கூறின. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால், அவருக்கு ஆதரவாக பேசினேன். இதனால் எனக்கும், முடா முறைகேட்டில் தொடர்பு உள்ளது என்று பேசினர். வழக்குப்பதிவு செய்ததும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், மத்திய அமைச்சர் குமாரசாமி மீதும் வழக்கு உள்ளது. அவர் ராஜினாமா செய்வாரா.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை