உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் சூழல் மாறும்? அமைச்சர் பரமேஸ்வர் பீதி!

அரசியல் சூழல் மாறும்? அமைச்சர் பரமேஸ்வர் பீதி!

மைசூரு: ''கர்நாடக அரசியல் சூழ்நிலை எப்படி மாறுமோ தெரியாது. காங்., அரசை கவிழ்க்க, பா.ஜ.,வினரால் முடியாது. எத்தனை கோடி கொடுத்தாலும், காங்கிரசார் செல்ல மாட்டார்கள்,'' உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:அமைச்சரவை மாற்றி அமைப்பது குறித்து, எனக்கு எந்த தகவலும் தெரியாது. முதல்வர் சித்தராமையா டில்லி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.கூட்டுறவு துறை நிகழ்ச்சியில் பங்கேற்க, அவர் சென்றுள்ளார். அமைச்சரவை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்க, அவர் செல்லவில்லை. இது குறித்து, கட்சி மேலிடம் முடிவு செய்யும்.கார்ப்பரேஷன், வாரியங்களுக்கு ஏற்கனவே தலைவர்களை, முதல்வர் நியமித்துள்ளார். உறுப்பினர்கள், இயக்குனர்கள் நியமன பட்டியல் இரண்டு மாதங்களுக்கு முன்பே, தயார் செய்யப்பட்டது; விரைவில் வெளியிடப்படும்.சித்தராமையா முதன் முறையாக, முதல்வராக இருந்த போது, 'மைசூரில் கட்சிக்கு சரியான கட்டடம் இல்லை. நீங்கள் எந்த சீமை முதல்வர்' என, கோபத்துடன் கேட்டேன். இப்போது இரண்டாம் முறை முதல்வரான பின், 15 கோடி ரூபாய் செலவில், மைசூரில் கட்சிக்கு அலுவலகம் கட்ட முடிவு செய்திருப்பது வரவேற்கதக்கது.அரசியல் சூழ்நிலை எப்படி மாறுமோ தெரியாது. விரைந்து அடிக்கல் நாட்டி, பணிகளை முடிக்க வேண்டும். எங்கள் அரசை கவிழ்க்க, பா.ஜ.,வினரால் முடியாது. அவர்கள் 50 கோடி, 100 கோடி ரூபாய் கொடுக்கலாம். ஆனால், எங்கள் கட்சியினர் செல்ல மாட்டார்கள். எங்கள் அரசை கவிழ்ப்பது, வெறும் கனவு.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி