உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்டாலினை உருது பேச சொல்வீர்களா?: பொறிந்து தள்ளிய முப்தி

ஸ்டாலினை உருது பேச சொல்வீர்களா?: பொறிந்து தள்ளிய முப்தி

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் உருது மொழியில் பேச சொன்னதால் ஆத்திரமடைந்த அம்மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, தமிழக முதல்வர் ஸ்டாலினை உருது மொழியில் பேச சொல்வீர்களா? என, பொறிந்து தள்ளினார். ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா முப்தி காஷ்மீரி மொழியில் பேசினார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் எழுந்து, உருது மொழியில் பேச சொல்லி வலியுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மெஹ்பூபா முப்தி, அவரை கடுமையாக சாடினார். ''ஜம்மு - காஷ்மீரில் எஞ்சியிருப்பது காஷ்மீரி மொழி மட்டுமே. இதையாவது நாம் பாதுகாக்க வேண்டும். ''மாநில மொழிக்கு மதிப்பு தருவது மிகவும் அவசியம். காஷ்மீரியில் பேசுவதை, உருது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள். என்னிடம் உருது பேச சொல்லி கட்டாயப்படுத்தும் நீங்கள், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஆங்கிலம் அல்லது உருதுவில் பேச சொல்லி கேட்பீர்களா?'' என்றார். இதைத் தொடர்ந்து காஷ்மீர் மொழியிலேயே அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ