உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூடாரம் இடிந்து விழுந்து கேரளாவில் பெண் பலி

கூடாரம் இடிந்து விழுந்து கேரளாவில் பெண் பலி

வயநாடு: கோடை விடுமுறையை முன்னிட்டு, கேரளாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர். மலப்புரம் மாவட்டம் நீலம்பூரில் இருந்து ஆண்கள், பெண்கள் என 16 பேர் அடங்கிய குழு, நேற்று முன்தினம் மாலை, வயநாடு மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் மேப்பாடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய இந்த விடுதி, வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு மரத்தாலான துாண்கள், ஓடுகள் வேயப்பட்ட மேற்கூரைகள் கொண்ட தற்காலிக கூடாரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மேப்பாடி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. அப்போது விடுதியின் ஒரு கூடாரம் இடிந்து விழுந்தது. இதில் நிஷ்மா, 24, என்ற பெண் உயிரிழந்தார். அவருடன் தங்கியிருந்த மேலும் மூன்று பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், அந்த தங்கும் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி