உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்ணை கொன்று கால்வாயில் சடலம் வீச்சு

பெண்ணை கொன்று கால்வாயில் சடலம் வீச்சு

நஜாப்கர்: கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டு, நஜாப்கர் கால்வாயில் சடலம் வீசப்பட்டது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.துவாரகாவில் உள்ள நஜாப்கர் வடிகாலில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கடந்த 17ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணையை துவக்கினர்.பிரேத பரிசோதனையில் இளம்பெண், கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. விசாரணையில் சீமாபுரியில் காணாமல்போனதாக கூறப்பட்ட கோமல், 22, என்பது தெரிய வந்தது.இதையடுத்து அவரை கொலை செய்ததாக ஜூபைர் ஆசிப் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் கோமலுடன் உறவில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.கடந்த 12ம் தேதி கோமலுடன் ஆசிப் சண்டை போட்டுள்ளார். அப்போது, கழுத்து நெரித்து கோமலை ஆசிப் கொன்றுள்ளார். பின், தன் நண்பர் ஜூபைருடன் இணைந்து, கோமல் சடலத்தை கால்வாயில் வீசியுள்ளார்.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ