உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிஜ்ஜில் 30 துண்டுகளாக பெண் உடல்: 15 நாட்களுக்கு பின் அம்பலமான கொலை

பிரிஜ்ஜில் 30 துண்டுகளாக பெண் உடல்: 15 நாட்களுக்கு பின் அம்பலமான கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரு, வையாலி காவலில், வீரண்ணா பவன் அருகில் ஒரு வீடு இரண்டு வாரங்களாக பூட்டி கிடந்தது.சில நாட்களாக வீட்டுக்குள் இருந்து, துர்நாற்றம் வீசியது. அந்த வீட்டில் வசித்து வந்த மஹாலட்சுமி, 29, என்ற இளம்பெண்ணை மொபைல் போனில் அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டனர்.அது 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது. இதைஅடுத்து அவரது தாய்க்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர், தன் மூத்த மகளுடன் அங்கு வந்தார். மஹாலட்சுமியின் வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார், அங்கு வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் இருந்த பிரிஜ்ஜில் இருந்து துர்நாற்றம் வருவது தெரிந்தது. அதை திறந்து பார்த்தபோது உள்ளே துண்டு, துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் இருந்தது. அது மஹாலட்சுமி என்பது தெரிய வந்தது. சம்பவ இடத்தை கூடுதல் போலீஸ் கமிஷனர் சதீஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.மஹாலட்சுமி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரே மஹாலட்சுமியை கொலை செய்திருக்க வேண்டுமென போலீசார் சந்தேகிக்கின்றனர். 15 நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.வட மாநிலத்தைச் சேர்ந்த மஹாலட்சுமி, ஷாப்பிங் மால் ஒன்றில் பணியாற்றினார். அவரது குடும்பத்தினர் பல ஆண்டு களாக பெங்களூரில் வசிக்கின்றனர். இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளது. கணவரிடம் இருந்து பிரிந்து, கடந்த ஆறு மாதங்களாக வாடகை வீட்டில், தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் பசவண்ண தேவர மடத்தில் வேலை செய்கிறார்.விரல் ரேகை நிபுணர்கள், தடயவியல் ஆய்வக வல்லுனர்கள் தடயங்களை சேகரிக்கின்றனர். மஹாலட்சுமியை அவருடன் தங்கியிருந்தவர் கொலை செய்தாரா அல்லது அவரது கணவர் கொலை செய்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

S. Gopalakrishnan
செப் 22, 2024 11:54

மஹாலக்ஷ்மியுடன் தங்கியிருந்தவர் பெயர் ஏன் வெளியிடப்படவில்லை ? அமைதி மார்க்கத்தவரோ ?


ram
செப் 24, 2024 10:52

அதில் என்ன சந்தேகம்


Bahurudeen Ali Ahamed
செப் 28, 2024 19:50

சகோதரா கொலை செய்தவர் பெயர் ரஞ்சன் ராய், கொலையாளி இந்த மதத்தை சேர்ந்தவர் என்று சொல்வீர்களா, அல்லது கொலையாளி பெயர் ரஞ்சன் ராய் என்று மட்டும் சொல்வீர்களா. குற்றவாளியை குற்றவாளியாய் மட்டும் பாருங்கள். குற்றம் செய்தவன் யாராக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் அதற்குரிய தண்டனை கிடைக்கவேண்டும் அவ்வளவுதான்


raja
செப் 22, 2024 08:18

திராவிட மாடல் விடியலிடமும் திராவிட கொழுந்து பெரியாரின் சீடன் அண்ணன் சுநா பானா வீணா விடம் திருமணம் கடந்த உறவில் ஈடு பட்டால் இது தான் நடக்கும் என்று யாராவது சொல்லுங்கப்பா...


Kasimani Baskaran
செப் 22, 2024 06:30

கண்டவருடன் உல்லாசமாக இருப்பது இப்பொழுதெல்லாம் சாதாரணமாகி விட்டது. நமது கலாச்சாரத்தை மதிக்காதவரை இதற்க்கெல்லாம் தீர்வே கிடையாது.


S. Gopalakrishnan
செப் 22, 2024 04:11

கலியாணம் ஆன பெண்கள் புருஷனுக்கு அடங்கி குடும்பம் நடத்த வேண்டும். இருபத்தி ஒன்பது வயஸில் புருஷனை விட்டு விலகி எவனுடனோ வாழ்ந்தால் இப்படித்தான். கலி முற்றி விட்டது !


S. Gopalakrishnan
செப் 22, 2024 04:11

கலியாணம் ஆன பெண்கள் புருஷனுக்கு அடங்கி குடும்பம் நடத்த வேண்டும். இருபத்தி ஒன்பது வயஸில் புருஷனை விட்டு விலகி எவனுடனோ வாழ்ந்தால் இப்படித்தான். கலி முற்றி விட்டது !


RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2024 06:04

கன்னடத்தான் ஈவேரா காட்டிய வழியில் போகக்கூடாது ன்னு சொல்லி திராவிடத்துக்கு எதிரா செயல்படறீங்க ......


RAMAKRISHNAN NATESAN
செப் 22, 2024 06:06

ஈவேரா காட்டிய வழியில் போகக்கூடாது ன்னு சொல்றீங்க .......... திராவிட கலாச்சாரம் கூடாது ன்னு நீங்க சொல்றதாலதான் எங்க ஸ்டாலின் இன்னும் நூறு வருசத்துக்கு திராவிடத்தின் அவசியம் இருக்கு ன்னு முழங்கியிருக்கிறார் .........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை