காசியாபாத் அருகே சூட்கேசில் பெண் உடல்
புதுடில்லி:டில்லி அருகே, 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.வட கிழக்கு டில்லியின் தயால்பூர் என்ற இடத்தில், 9 வயது சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்ட நிலையில், 25 வயது பெண்ணின் உடல் காசியாபாத் அருகே சூட்கேசில் கைப்பற்றப்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கே சென்ற லோனி என்ற பகுதியின் போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர்.கொலையான அந்தப் பெண்ணின் காலில் மெட்டி அணிந்திருந்தார்; நெற்றியில் பொட்டு வைத்திருந்தார். சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா என்பன போன்ற விவரங்கள் தெரிய வரும் என போலீஸ் உதவி கமிஷனர் அஜய்குமார் சிங் கூறினார்.