உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛‛லிவிங் டுகெதர் உறவு திருமணம் அல்ல: கேரள உயர்நீதிமன்றம் கருத்து

‛‛லிவிங் டுகெதர் உறவு திருமணம் அல்ல: கேரள உயர்நீதிமன்றம் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: ''லிவிங் டுகெதர் உறவில் பங்குதாரர் (பார்ட்னர்) என்று மட்டுமே கூற முடியும். அந்த உறவு திருமணம் அல்ல'' என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்துள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளைஞர், தன்னை குடும்ப வன்முறை செய்ததாக இளம்பெண் புகாரளித்தார். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், ''இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப வன்முறை வழக்கு தவறானது. லிவிங் டுகெதர் உறவில் பங்குதாரர் (பார்ட்னர்) என்று மட்டுமே கூற முடியும். அந்த உறவு திருமணம் அல்ல. துணையை கணவர் என்று அழைக்க முடியாது. சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும். பங்குதாரர்களிடம் இருந்து உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால், அது குடும்ப வன்முறை வரம்பிற்குள் வராது'' எனக் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 12, 2024 10:38

முறை தவறிய வாழ்க்கை முறை என்றைக்குமே ஆபத்து. அது ஆண் ஆனாலும் சரி பெண் ஆனாலும் சரி. குடியை விட கொடுமையானது காமத்திற்கு அடிமையாவது.


Sivak
ஜூலை 11, 2024 22:31

மிகவும் சரியான .. தேவையான தீர்ப்பு


vijay, covai
ஜூலை 11, 2024 22:15

சபாஷ் சரியான தீர்ப்பு,இந்தியாவுக்கு எதிரான கலாச்சாரம்


Anburaj Mani
ஜூலை 11, 2024 21:34

எல்லாம் நன்மைக்கே


Mohan
ஜூலை 11, 2024 20:59

நீதியரசர்களே, பார்ட்னர் சரி. அதுக்காக இந்த காம வெறி பிடித்த ஆண் பார்ட்னர் உபயோகப்படுத்தி போட்ட டூத் பிரஷ் போல பெண்களை நினைத்து இது மாதிரி நடத்தியதற்கு எந்த தண்டனையும் இல்லையா, அப்படியே விட்டுவிடலாமா?


Sivak
ஜூலை 11, 2024 22:30

கல்யாணம் வேண்டாம் காமம் தான் வேணும் என்று வந்த அந்த தறுதலை பெண்ணுக்கு முட்டு குடுக்க வந்தவரு ஆம்பளையா இல்ல பொம்பளையா ??? வரவேற்க தக்க தீர்ப்பு


rama adhavan
ஜூலை 11, 2024 20:53

சரியான தீர்ப்பு. ஒரு மடத்தில் பலர் வந்து தங்குவார்கள். விருப்பப்படி மடத்தை விட்டு போவார்கள். அது போல் தான் வாழும் தற்காலிக உறவு. ஒரு சந்தோசதுக்காக அவர்கள் ஆசை முடியும் வரை வாழ்வது. பின்பு பிரிவது. இது மனித வாழ்வு இல்லை.


GMM
ஜூலை 11, 2024 20:13

திருமணம் சட்ட பூர்வமாக இருக்க வேண்டும். பதிவு கட்டாயம். பாலியல் பலாத்கார புகார் கொடுக்கும் பெண் திருமணம் முன் தந்தை பாதுகாப்பு. பின் கணவர் பாதுகாப்பு. கணவர் இறந்த பின், மறுமணம் புரியாத வாழ்க்கை வாழும் பெண்ணிற்கு அரசு முழு சட்ட பாதுகாப்பு, சலுகைகள் தர வேண்டும். அறிமுகம் இல்லாத நபரிடம் விரும்பி பழகி அரசிடம் புகார் சொல்வதை எப்படி விசாரித்து தீர்வு காண முடியும்.? நான்கு சுவருக்குள் நல்லது கெட்டது நடப்பதை அறிவது கடினம். Live in together மோசமான கலாச்சாரம். இதனை நம் நாட்டில் அனுமதிக்க கூடாது.


D.Ambujavalli
ஜூலை 11, 2024 19:57

வன்முறை என்று கோர்ட் வரை போவானேன் ? 'போடா நீயும் ஆச்சு, உன் உறவும் ஆச்சு ' என்று கழற்றிக்கொண்டு பிரிய வேண்டியதுதானே இது no commitment ஒப்பந்த வாழ்க்கைதானே


Kannan Chandran
ஜூலை 11, 2024 18:58

அப்ப, விபச்சாரத்திற்கும் லிவிங் டுகெதர்-க்கும் என்ன வித்தியாசம் .


Anburaj Mani
ஜூலை 11, 2024 21:37

உண்மை.


Rajalakshmi
ஜூலை 11, 2024 18:32

Good .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை