உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தர பிரதேசத்தில் மண்சரிவு; 4 பெண்கள் உயிரிழந்த சோகம்

உத்தர பிரதேசத்தில் மண்சரிவு; 4 பெண்கள் உயிரிழந்த சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டு 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 5 பேர் பலத்த காயமுற்றனர். உத்தரபிரதேசம் காஸ்கஞ்ச் பகுதியில், வீடு கட்டும் பணி நடந்து வந்தது. அங்கு பணிபுரிந்த பெண்கள் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பெரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், 5 பெண்கள் பலத்த காயமுற்றனர். அவர்களை மீட்ட மீட்பு படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஜே.பி.சி., இயந்திரம் மூலம் மண்ணை அகற்றி, உயிரிழந்த பெண்களின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 'மண் சரிவில் சிக்கி, உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

வைகுண்டேஸ்வரன்
நவ 12, 2024 19:35

உ பி யில் நடந்ததால் சும்மா இருக்கோம். இதுவே தமிழ் நாட்டில் நடந்திருந்தால், விடியல் ஆட்சி, திராவிட மாடல் னு கூவி இருப்போமல்லவா???


அப்பாவி
நவ 12, 2024 18:27

வேலை வெட்டியில்லாம வேடிக்கை பார்க்கும் கூட்டத்தப் பாருங்க.


ரெங்கசாமி
நவ 12, 2024 18:26

ஏழெட்டு வருஷம் முன்னாடி ஸ்ரீரங்கத்தில் இப்பிடிதான் மண்சரிந்து ஒரு தத்தி இஞ்சினீயர் உட்பட ஆறு பேர் இறந்தனர். பக்கத்து வீடும் இடிஞ்சு விழுந்தது. திராவிடன் எல்லாத்துக்கும் முன்னோடி.


MADHAVAN
நவ 12, 2024 17:38

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹோட்டல்களில் உணவுகளில் எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீரைக் கலப்பது, உடற்கழிவுகளை கலப்பது போன்ற சம்பவம் மிகவும் சர்வ சாதாரணமாகிவிட்டது,


Ramesh Sargam
நவ 12, 2024 13:06

இன்று கட்டிடங்கள் கட்டுபவர்கள் அரைகுறை படிப்பறிவுள்ளவர்கள். அவர்கள் எண்ணமே குறைந்த காலத்தில் பெரிய பணக்காரார்களாகிவிடவேண்டும். ஆகையால் அவர்கள் கட்டிடத்திற்கும், கட்டிடம் கட்டும் ஊழியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு எதுவும் கொடுக்கமாட்டார்கள். விளைவு கட்டிடங்கள் விழும், மண் சரியும், உயிர்பலி ஏற்படும். இந்த நிலை மாறவேண்டும். மாறுமா ...?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை