உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒருத்தரையும் விட மாட்டோம்; தக்க பதிலடி கொடுப்போம்; அமித் ஷா சூளுரை

ஒருத்தரையும் விட மாட்டோம்; தக்க பதிலடி கொடுப்போம்; அமித் ஷா சூளுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பஹல்காமில் இந்திய மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ry6d6l3s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு முதல்முறையாக அமைச்சர் அமித் ஷா இதுபோன்று பேசியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது; பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த நாட்டுக்குமே துயரமான நிகழ்வாகும். பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா, பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்து கொள்ளாது என்பதை அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். இந்தக் கோழைத்தனமான தாக்குதலை அவர்களின் (பயங்கரவாதிகள்) வெற்றியாக பார்ப்பவர்கள், மனதில் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு இழப்பிற்கும் தக்க பதிலடி கொடுப்போம். இது பிரதமர் மோடியின் ஆட்சி. ஒருத்தரையும் சும்மா விட மாட்டோம். நாட்டின் எந்த மூலையிலும் பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம். அதன் வேரில் இருந்து அடியோடு அகற்றுவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
மே 01, 2025 23:24

இப்படியே மாறி மாறி உதார் விட்டே காலத்தை ஓட்டி விட முடிவு செய்து விட்டார்கள் போல் தெரிகிறது!


சண்முகம்
மே 01, 2025 21:31

அணு ஆயதங்கள் உடைய பாகிஸ்தானுடன் வெளிப்படையான போர் சாத்தியமில்லை. இந்தியாவிற்கும் பேரிழப்பு நேரிடும். கவனமாக நேரம் பார்த்து அடிக்க வேண்டும்.அவசரக்குடுக்கைகள் கவனத்துடன் கருத்து பதிவிட வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 01, 2025 21:22

தாமதிப்பதில் அர்த்தமுள்ளது ...... அங்கே ஐ எஸ் ஐ வெளிப்படையாகவே அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது ......


Gnana Subramani
மே 01, 2025 21:21

பாகிஸ்தானை பிறகு பார்க்கலாம்.


Anantharaman Srinivasan
மே 01, 2025 20:52

Already more than 15 days is over. செய்து காட்டுங்கள். அப்பதான் பாக்கிஸ்தானுக்கு பயமிருக்கும். வாலாட்டாமல் அடங்கியிருக்கும்.


R. SUKUMAR CHEZHIAN
மே 01, 2025 20:21

நம் நாட்டுக் குள்ளேயே இருந்து கொண்டு நம் தேசதிற்கு எதிராக கருத்து கூறுபவர்கள், பாகிஸ்தான் ஸ்லீபர் செல்களை என்ன செய்ய போகிறோம், இவர்கள் நம் தேசதிற்கு மிகவும் ஆபத்தானவர்கள் இவர்களையும் ஈவு இரக்கமில்லாமல் ஒழித்து கட்ட வேண்டும்.


Ramesh Sargam
மே 01, 2025 20:19

சூளுரை கொடுப்பதில் இந்திய தலைவர்களை மிஞ்சமுடியாது. செயலில் காட்டுங்களப்பா?


Raja k
மே 01, 2025 19:17

சொல்லாதீங்க, செய்ங்க


vivek
மே 01, 2025 20:51

ராசா...சண்டைக்கு போறது டாஸ்மாக் போற மாறி நினைபோ


rajan
மே 01, 2025 19:11

when? Merely telling does not take us the target in rooting out terrorism


vivek
மே 01, 2025 20:50

rajan.you don't have knowledge to rush or proper brain


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை