உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து சமுதாயங்களின் நலனுக்காக பணியாற்றுங்கள்: கார்கே பேட்டி

அனைத்து சமுதாயங்களின் நலனுக்காக பணியாற்றுங்கள்: கார்கே பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பீதர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சாகர் கன்ட்ரே வெற்றிக்கு, முஸ்லிம் ஓட்டுகளே காரணம் என, கூறிய அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கு, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.பி.,க்கள் அனைத்து சமுதாயங்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும் என கார்கே வலியுறுத்தி உள்ளார்.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பீதர் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சாகர் கன்ட்ரே வெற்றி பெற்றிருந்தார். 'இவருக்கு முஸ்லிம் வாக்காளர்கள் ஓட்டு போட்டதால், வெற்றி பெற்றார்' என, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியது சர்ச்சையானது. இது குறித்து, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெங்களூரில் அளித்த பேட்டி: மக்கள் பிரதிநிதி ஒருவர் வெற்றி பெற்றார் என்றால், அவருக்கு அனைத்து சமுதாயங்களின் மக்களும் ஓட்டு போட்டிருப்பர். வெற்றி பெற்ற பின், தனக்கு எந்த சமுதாயத்தினர் ஓட்டு போட்டனர், யார் போடவில்லை என, ஆலோசித்தபடி காலத்தை கடத்துவது சரியல்ல.தேர்தலில் வெற்றி பெற்ற பின், அமர்ந்திருக்க கூடாது. அனைத்து சமுதாயங்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே, மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

எவர்கிங்
ஜூன் 27, 2024 12:05

சீதாராம் கேசரி


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 26, 2024 22:11

சிறுபான்மையினருக்கு சலுகைகளை வாரி வழங்குவதாக வாக்குறுதி கொடுத்துத்தான் உங்களுக்கு கர்நாடகாவில் வெற்றி கிடைத்தது ..... அதே நிலைதான் கடந்த மக்களவைத் தேர்தலிலும் ..... முதலில் நீங்கள் அனைத்து சமுதாயங்களின் நலனுக்காகப் பணியாற்றுங்கள் ....


Ramesh Sargam
ஜூன் 26, 2024 21:04

கொஞ்சம் விட்டால் இந்த அமைச்சர் ஜமீர் அகமது கான் இந்தியாவின் வளர்ச்சிக்கே அவர்கள் சமுதாயம்தான் காரணம் என்று சொன்னாலும் சொல்வார். அவர் வாயை அடக்கவேண்டும்.


bal
ஜூன் 26, 2024 20:33

திருட்டு எண்ணம் கொண்டவர். அனைத்து என்பது அனைத்து எல்லாம் இல்லை. எல்லா சமுதாயத்தையும் அழித்து முஸ்லிம்களுக்கு மட்டும் பணியாற்றுங்கள் என்று அர்த்தம்.


M Ramachandran
ஜூன் 26, 2024 20:03

ஐயா முதலில் உங்கள் கர்நாடகாவை கவனியுஙகள்.மற்றும் முதல்வரிடம் சொல்லுங்கள் அங்கே குடுமி பிடி சண்டை ஜோரா ஆரம்பிடிச்சி.


GMM
ஜூன் 26, 2024 19:04

ஒரு தொகுதியில் அதிக எண்ணிக்கை சாதியினர் மற்றும் அதிக எண்ணிக்கை கிருத்துவ, இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் சாதி, மத உத்தரவில் தேர்தல் வெற்றியை தீர்மானிப்பதற்கு மாற்று வழி காண்பது தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தின் கடமை. அந்த தொகுதியில் உள்ள பிற சிறுபான்மை சாதி, மதத்தினர் ஒடுக்கப்பட்டு, அழிக்க படுவார்கள். அதிக ஓட்டும், குறைந்த ஓட்டும் விகிதாசார அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். இதில் வெற்றியை தீர்மானிப்பது கடினம். ஓட்டுக்கு பணம், சலுகைகள் பயன் தராது?


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 26, 2024 18:38

சொல்வது மட்டும் தான் ஆனால் இவர்களுக்கு வோட்டை பிட்சை போடும் முஸ்லிம்களுக்காக மட்டும் தான் சலுகைகள் கொடுப்பார்கள். அறிவாளி ஹிந்துக்கள் வரலாற்றில் இருந்து பாடம் கற்காமல் மறுபடி இந்த திருடர்களுக்கு கொள்ளை அடிக்க வாய்ப்பை கொடுக்கிறார்கள்,இந்த கான் போலி காந்தி காங்கிரஸ் கொண்டுவந்த வகிபு வாரிய சட்டம் ஒன்று போதும் இவர்களின் முஸ்லீம் ஆதரவு மனப்பான்மைக்கு உதாரணம்.


ஆரூர் ரங்
ஜூன் 26, 2024 18:22

உண்மையை தானே அமைச்சர் கூறினார்? பெரும்பாலான இடங்களில் ஜமாத் களின் கடுமையான உத்தரவுகளால் 99 சதவீத முஸ்லிம்கள் வாக்களித்தனர். ஆனால் பாதி ஹிந்துக்கள் அதீதமான நம்பிக்கையால் வீட்டில் முடங்கி ஓட்டுப் போட வரவில்லை. இதுதான் தேர்தல் முடிவுக்குக் காரணம்.


lana
ஜூன் 26, 2024 18:15

அப்படி நேரடியாக சொல்ல முடியாது ஆனால் அது தான் உண்மை.


ManiK
ஜூன் 26, 2024 18:14

Electionகு முன்னாடி ஓட்டு கேட்ப்பாங்க, Electionகு பின்னாடி தூக்கி எரியுவாங்க. Minority நண்பர்களே - please understand this congresx, dmk tactics.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை