உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யானை மிதித்து தொழிலாளி பலி

யானை மிதித்து தொழிலாளி பலி

ஹாசன்: காபி எஸ்டேட்டில் பணிபுரிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளியை, யானை மிதித்துக் கொன்றது. கோபமடைந்த கிராமத்தினர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஹாசன் மாவட்டம், பேலுாரின் மாதவாரா கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த், 45. இங்குள்ள காபி எஸ்டேட்டில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை பணி முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, உணவு தேடி வந்த யானை, வசந்த்தை விரட்டியது. உயிருக்கு பயந்து ஓடிய அவரை, யானை மிதித்துக் கொன்றது. இதை பார்த்த அங்கிருந்த சிலர், சத்தம் எழுப்பி, யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொழிலாளி இறந்ததால் கோபமடைந்த கிராமத்தினர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள், 'கடந்த சில மாதங்களில் யானை மிதித்து இறப்பது, இது மூன்றாவது சம்பவம். யானைகளின் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம்' என்றனர்.தகவல் அறிந்து அங்கு வந்த எம்.எல்.ஏ., சுரேஷ், மாவட்ட போலீஸ் எஸ்.பி., முகமது சுஜிதா, கிராம மக்களிடம் பேசி, சமாதானப்படுத்தினர்.மாவட்ட கலெக்டர் சத்யபாமா கூறுகையில், ''இந்த மண்டலத்தில் 60க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. யானைகள் தடுப்பு குழுவினரிடம் உத்தரவுகள் வழங்கி உள்ளோம். ''இனி, இதுபோன்று நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். யானைகள் தடுப்பு குழுவினரின் உத்தரவுகளை மக்கள் பின்பற்ற வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ