மேலும் செய்திகள்
அருவருப்பாக உள்ளது!
34 minutes ago
புகார் பெட்டி
42 minutes ago
என்.சி.ஆர்., பகுதிகளுடன் தலைநகரை இணைக்க விரைவில் பஸ் வசதி
50 minutes ago
டொராண்டோ - டில்லி விமானத்துக்கு மிரட்டல்
1 hour(s) ago
புதுடில்லி: நாட்டின் பாதுகாப்புக்காக, கடல் மட்டத்தில் இருந்து 13,700 அடி உயரத்தில், லடாக்கில் கட்டப்பட்ட உலகின் உயரமான நியோமா விமானப்படை தளம் செயல்பாட்டுக்கு வந்தது. சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்குடன் பேச்சு நடத்தியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மீண்டும் மலர்ந்துள்ளது. இதனால், சீனாவுக்கு நிறுத்தப் பட்டிருந்த நேரடி விமான சேவை மறுபடியும் துவங்கி உள்ளது. எனினும், ராணு வ விவகாரத்தில் சீனா நம்பகமான நாடாக இல்லை. ராணுவ பலம் லடாக் எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் பிரமாண்ட ராணுவ விமான இயங்கு தளத்தை சீனா கட்டி வருகிறது. கடந்த 2020ல் மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து, 110 கி.மீ., தொலைவில் இந்த விமான தளம் கட்டப்பட்டு வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாக அம்பலமானது. வீரர்கள் முகாம், வெடிமருந்து சேமிப்பு கிடங்குகள், ஏவுகணை தளங்கள், ரேடார் அமைப்புகள் என ராணுவத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் அடங்கிய அதிநவீன வசதிகளுடன் இந்த விமான தளத்தை சீனா கட்டி வருகிறது. மே லும், திபெத்தின் கர் பவுண்டி பகுதியிலும் மற்றொரு ஏவுகணை தளத்தை சீனா அமைத்து வருகிறது. இவை, லடாக்கில் நம் அரசு கட்டிய நியோமோ விமா ன தளத் துக்கு நேர் எதிரே, அமைந்து இ ருப்பதாக கூறப்படுகிறது . இது தவிர, இந்தியாவை நோக்கி இருக்கும் ஹோடான், காஷ்கர், கர்குன்சா, ஷிகாட்சே, பாங்டா, யிங்சி ஆகிய விமானப்படை தளங்களில் போர் வி மானங்களையும் சீனா குவித்து வைத்துள்ளது. அங்கு இருந்தபடி உளவு பார்ப்பதற்கான கட்டமைப்பு வசதிகள், ட்ரோன் இயங்குதளங்கள் ஆகியவற்றையும் சீனா அமைத்துள்ளது. சர்வதேச எல்லைக்கோடு பகுதி முழுதும், ஹெலிபேடு தளங்களையும் சீனா புதிதாக கட்டி முடித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சீன எல்லையொட்டிய 3,488 கி.மீ., துாரப் பகுதிகளில் நம் ராணுவ பலத்தை வலுப்படுத்தும் வகையில், நியோமோ விமானப்படை தளம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு மொத்தம், 230 கோடி ரூபாய் மதிப்பில் விரிவுபடுத்தப்பட்ட இந்த விமானப்படை தளத்தை நம் விமானப்படை தளபதி ஏ.பி.சிங் முறைப்படி திறந்து வைத்தார். சீனாவுக்கு அருகே, சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் இருந்து 35 கி.மீ., தொலைவில் இந்த விமானப்படை தளம் அமைந்துள்ளது. போர் சூழல் ஏற்பட்டால், ராணுவ விமானங்கள் எளிதாக தரையிறங்க வசதியாக 2.7 கி.மீ., நீளத்திற்கு வலுவான ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. தவிர, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கட்டடம் உட்பட விமானம் தரையிறங்குவதற்கான அனைத்து உள்கட்டமை ப்பு வசதிகளும் நியோமா படைத்தளத்தில் இருக்கின்றன. இதன் மூலம் இங்கு இருந்தபடி கனரக விமானங்கள், போர் விமானங்களை எளிதாக இயக்க முடியும். படைகள், ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் வினியோகம் ஆகியவற்றை விரைவாக குவிக்க வசதியாக, நியோமா விமானப்படை தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் சோ, டெம்சோக் மற்றும் டெஸ்பாங் பகுதிகளுக்கு, இங்கு இருந்தபடி படைகளை எளிதாக நகர்த்திச் செல்ல முடியும். அ ருணாச்சலில், 'பூர்வி பிரசாந்த் பிரஹார்' போர் பயிற்சி யை நம் படையினர் துவங்கி இருக்கும் சூழலில், நியோமா விமானப்ப டை தளம் செயல்பாட்டுக்கு வந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா க கருதப்படுகிறது. துல்லிய தாக்கு தல், படைகளை நகர்த்துதல், விமானங்கள் மூலம் பொருட்களை கொண்டு சேர்த்தல், மலையேற்ற திறன் பயிற்சிகள் ஆகியவற்றுக்கு இந்த விமானப்படை தளம் தற்போது பெரிதும் உதவும். லே, கார்கில் மற்றும் டவுலத் பெக் ஓல்டி ஆகிய படைத்தளங்கள் வரிசையில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியோமா விமானப்படை தளமும் இடம் பெற்றுள்ளது.
34 minutes ago
42 minutes ago
50 minutes ago
1 hour(s) ago