உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி: சந்திரபாபு நாயுடு

உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி: சந்திரபாபு நாயுடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ உலகின் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் ' என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.டில்லியில் பழைய பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த தேஜ கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், உலகளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளோம். மோடி கூறியது போல், உலகளவில் 2047 ல் இந்தியா வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக மாறும். உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி. சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளது. மோடியின் பிரசாரம் ஆந்திராவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் பேசியதாவது: நாம் ஒன்றாக இணைந்திருப்பது நல்ல விஷயம். நாங்கள் எல்லோரும் உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவோம். ஞாயிற்றுக் கிழமை நீங்கள் பிரதமராக பதவியேற்க உள்ளீர்கள். இன்றே நீங்கள் பதவியேற்றிருக்கலாம் என நான் விரும்புகிறேன். நீங்கள் எப்போது உறுதிமொழி ஏற்றாலும் நாங்கள் உங்களுடன் இருப்போம். நாங்கள் உங்கள் தலைமையில் இணைந்து பணியாற்றுவோம்.இந்தியர்களின் அனைத்து விருப்பங்களையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார். ‛ இண்டியா ' கூட்டணி கட்சியினர் நாட்டிற்கும், எங்கள் மாநிலத்திற்கும் ஒன்றும் செய்யவில்லை. இம்முறை எதிர்க்கட்சி வரிசையில் அமரும் ‛இண்டியா' கூட்டணி கட்சியினர் அடுத்த முறை அடுத்த முறை அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும். பிரதமராக மோடியை தேர்வு செய்வதில் ஐக்கிய ஜனத தளம் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது. மோடியின் தலைமையில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். தேஜ கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். மோடி மீண்டும் பிரதமர் ஆவதை ஐஜத ஆதரிக்கிறது. இந்த நாட்டிற்காக அவர் சேவை செய்துள்ளார். அந்த சேவையில் ஏதேனும் மிச்சமிருந்தால் அதனை இந்த முறை பூர்த்தி செய்வார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

தஞ்சை மன்னர்
ஜூன் 07, 2024 20:36

தம்பி அப்படியே ஆந்திராவுக்கு 20, 000 கோடிக்கு ரெண்டு திட்டம் பார்ஸல்


sankaranarayanan
ஜூன் 07, 2024 20:30

ஆங்கிலத்தில் "எ" என்ற எழுத்தில் ஆரம்பமாகிறது "ஆந்திர பிரதேசம்" அதுபோன்று "பி" என்ற எழுத்தில் ஆரம்பமாகிரற்றது "பீகார்" ஆகையால் இவ்விரு எழுக்களைக்கொண்ட மாநில முதல்வர்கள் பாரதிய ஜனதா பார்டியுடன் சேர்ந்து மத்தியில் ஆராட்சி அமைப்பது நாட்டின் நிரந்தர ஆட்சியைத்தான் குறிக்கிறது


Ramesh Sargam
ஜூன் 07, 2024 19:32

சந்திரபாபு நாய்டுவும், நிதிஷ்குமாரும் இதே மனநிலையில் எப்பொழுதும் இருக்கவேண்டும் என்று நான் அந்த எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.


ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 19:16

மோதி யை விட அரசியலில் அனுபவம் மிக்கவர் சந்திரபாபு. ஆனாலென்ன? அரசியல் வாழ்க்கை காங்கிரஸ் கலாச்சாரத்தில் துவங்கியதுதான் இன்னும் பிரச்சினை. இன்னும் அதிக மனமாற்றம் தேவை.


raman
ஜூன் 07, 2024 18:44

ஆக்க பூர்வமாக எதிர்க்கட்சிகள் செயல்படவேண்டும் அதற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி எந்த காரணத்திற்காகவும் இருசபைகளையும் முடங்க விடமாட்டோம் அவைத்தலைவர் முன்னால் ஒன்று கூடி கூச்சல் குழப்பம் விளைவிக்க மாட்டோம் விவாதத்தில் அவைத்தலைவர் கட்டளைக்கு ஏற்ப பங்கெடுப்போம் செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளை விவாதிக்க மாற்றவிவாதங்களை ஒத்திவையுங்கள் என்று கோரமாட்டோம் என்ற சபதத்துடன் அவையை நடத்தவிடுவோம் என்று உறுதிமொழி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் எடுத்துவிட்டு வரவேண்டும் அரோக்கியமான ஜனநாயகத்திற்கு எதிர்க்கட்சிகள் வழி வகுக்க வேண்டும்


Mohan
ஜூன் 07, 2024 17:08

எல்லோருக்கும் ஒரு " ரியலைசிங் நிலை" ஒன்று உண்டு. அதைத் தாண்டமாட்டார்கள். அது போல தான் நிதிஷ்ஜியும் நாயுடுகாருவும். மேலும் இண்டி கூட்டணியே துண்டு கூட்டணியாகவும் இந்த தேர்தலிலேயே சண்டை போட்ட கூட்டணியாகவும்தானே இருக்கிறார்கள்? எதை நம்பி அவர்கள் போக இயலும். ஆகவே அறிந்து, தெரிந்து பின் புரிந்து கொண்டு செயலாற்றி தங்கள் மாநிலத்திற்கு நன்மை பெற்றுத்தர மோடிஜிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அது தொடர இறைவனை வேண்டுவோம். அந்நிய சக்திகளை தலைவாசலிலாவது நிறுத்தி வைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு சேவை செய்வதன் மூலம் அவர்கள் தம் தவறை புரிந்து கொள்வர்.


Baranitharan
ஜூன் 07, 2024 15:45

வயித்தெரிச்சல் யாரை விட்டது.


KRISHNAN R
ஜூன் 07, 2024 15:38

நாட்டுக்கு நல்ல விசயங்கள் மட்டுமே தேவை என்று மக்கள் சொல்லிவிட்டார்கள். சனநாயகம் என்று சொல்லி விட்டு பொழுதை போக்க இல்லை. இதை அனைவரும் உணர்ந்தா சரி.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 07, 2024 15:13

நீங்கல்லாம் ரொம்ப எதிர்பார்த்து அவரை நோகடிச்சா உதறிட்டு போயிடுவார் நாயுடு காரு ....


babu
ஜூன் 07, 2024 14:52

பாராட்டு அதிகமா இருக்குதே கேட்ட துறை கிடைச்சிட்டுதோ


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை