புதுடில்லி: உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். இந்தியா 82 வது இடத்தில் உள்ளது.சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அளித்த தகவல்கள் அடிப்படையில், உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசையை ஹென்லே பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.இந்த பட்டியலில், முதலிடத்தில் உள்ள சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை வைத்து 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.2வது இடம்: பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்(192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்)3வது இடம்: ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா, ஸ்வீடன்(191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்)4வது இடம்: பெல்ஜியம், டென்மார்க், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, பிரிட்டன்,(190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்)5வது இடம்: ஆஸ்திரேலியா, போர்ச்சுகல்(189 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்)6வது இடம்: கிரீஸ், போலந்து(188 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்)7வது இடம்: கனடா, ஹங்கேரி, மால்டா(187 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்)8வது இடம்: அமெரிக்கா( 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்)9வது இடம்: எஸ்தோனியா, லிதுவேனியா, யுஏஇ(185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்)10வது இடம்: ஐஸ்லாந்து, லாட்வியா, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா( 184 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்)58 நாடுகளுக்கு
இந்த பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 82 வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம், இந்தோனேஷியா, மலேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். கடைசி இடம்
நமது அண்டை நாடான பாகிஸ்தான் 100வது இடத்தில் உள்ளது. இந்நாட்டு பாஸ்போர்ட் மூலம், 33 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இந்த பட்டியலின் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. இந்நாட்டு பாஸ்போர்ட் மூலம் 26 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.