உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு மருத்துவமனை மருந்தில் புழுக்கள்: மத்திய பிரதேசத்தில் மற்றொரு அவலம்

அரசு மருத்துவமனை மருந்தில் புழுக்கள்: மத்திய பிரதேசத்தில் மற்றொரு அவலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவாலியர்: மத்திய பிரதேசத்தில், இருமல் மருந்து குடித்து, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த விவகாரம் மறைவதற்குள், இங்குள்ள அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. புகார் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், 1 - 6 வயது வரையிலான 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடந்த மாதம் அடுத்தடுத்து உயிரிழந்தன. சிறுநீரக செயலிழப்பால் குழந்தைகள் இறந்ததும், மருத்துவமனையில் பரிந்துரைக்கப்பட்ட, 'கோல்ட்ரிப்' மருந்து குடித்ததே இதற்கு காரணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 'கோல்ட்ரிப்' மருந்துக்கு மாநிலம் முழுதும் தடை விதிக்கப்பட்டு, குழந்தைகள் இறப்பு குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில், குவாலியர் மாவட்டம் மொரார் நகரில் செயல்படும் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கு, 'அசித்ரோமைசின் ஆன்டிபயாடிக்' மருந்து வழங்கப்பட்டது. அதில் புழுக்கள் இருந்ததை அடுத்து, குழந்தையின் தாய் மருத்துவமனையில் புகார் தெரிவித்தார். சோதனை இதையடுத்து, மருத்துவமனையில் இருந்த அந்த மருந்து அனைத்திற்கும், 'சீல்' வைக்கப்பட்டது. ஏற்கனவே, வழங்கப்பட்ட, 300க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களும் திரும்பப்பெறப்பட்டன. 'அசித்ரோமைசின்' மருந்து மாதிரிகள், போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு சோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து அரசு மருத்துவமனை மருந்து ஆய்வாளர் அனுபூதி சர்மா நேற்று கூறுகையில், “குழந்தைகளின் பல்வேறு நோய் தொற்றுக்கு, 'அசித்ரோமைசின்' மருந்து வழங்கப்படுகிறது. ''புகாரைத் தொடர்ந்து இருப்பில் இருந்த மருந்துகள் அனைத்தும், தனியாக எடுத்துச் சென்று சீல் வைக்கப்பட்டன. இதன் மாதிரிகள், போபால் மட்டுமின்றி, மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் உள்ள ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ''முடிவுகள் வந்தபின், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Venugopal S
அக் 17, 2025 13:03

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது என்ற விபரத்தை மறைப்பதைப் பார்க்கும் போது அது பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்தது போல் உள்ளதே!


Sangi Mangi
அக் 17, 2025 11:57

வேற என்ன எதிர் பார்க்க முடியும்??


Mario
அக் 17, 2025 09:44

பிஜேபி அரசு சாதனை


Barakat Ali
அக் 17, 2025 09:41

பீமாரு மாநிலங்களில் மத்திய பிரதேசம் ஏற்கனவே உள்ளது.. அதில் புதிதாகச் சேரவிருப்பது தமிழகம் .....


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 17, 2025 07:35

மருந்து எங்கே தயாரானது.. தயாரித்தவர் கிம்ச்சை மன்னரின் பினாமியாகக்கூட இருக்கலாம்..


அப்பாவி
அக் 17, 2025 06:56

இந்த புழுக்கள் உள்ளே போயிவயத்தில் இருக்கிற பாக்டீரியாவையெல்லாம் கொன்னு சாப்புட்டுரும் போல.


சாமானியன்
அக் 17, 2025 06:30

இந்த மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்கின்ற அளவில் உள்ள நிகழ்வுகளும் தற்போது சாதாரணமாக நடக்கிறது. மருத்துவமனைகளில் தூய்மை கேள்விக்குறியாகிறது. 100% ஆய்வு தேவை. இல்லாவிட்டால் அரசு மருத்துவமனை பேர் கெட்டுப் போகும். இப்போதெல்லாம் சிறுசிறு அலட்சியங்கள் கூட வலைதளங்களில் மக்களால் விவாதிக்கப்படுகின்றது. விழிப்புணர்வு பலமடங்கு தேவை.


Kasimani Baskaran
அக் 17, 2025 03:56

நான் வேஜிட்டேரியன் எதிருயிரி மருந்து எங்கு தயாரித்தது என்று தகவல் வரும் வரை கருத்து சொல்வது சரியல்ல..


Ramesh Sargam
அக் 17, 2025 02:03

நாட்டில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் மாதா மாதம் ஆய்வு நடைபெறவேண்டும். அதுவும் நேர்மையான ஆய்வு. தரமற்ற மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும். மக்களின் உயிரை காப்பாற்றும் மருந்தில் தரமில்லையென்றால் ... அப்படி தரமற்ற மருந்து தயாரிக்கும் நிறுவன முதலாளிகளுக்கு கடுமையான தண்டனை நிறைவேற்றப்படவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை