உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கப்படும்: ராகுல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் பதில்

எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கப்படும்: ராகுல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசியல் கட்சிகளை முக்கியமான பங்குதாரர்களாக கருதுவதாகவும், அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்படும் எனவும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.டில்லியில் நிருபர்களைச் சந்தித்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், மஹாராஷ்டிராவில் மக்கள் தொகையை விட வாக்காளர்கள் அதிகரித்தது எப்படி? லோக்சபா தேர்தலுக்கு பிறகு 39 லட்சம் வாக்காளர்கள் ஏன் சேர்க்கப்பட்டனர்? என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி இருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a0y9zxgw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு பதிலளித்து தேர்தல் கமிஷன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது; வாக்காளர்கள் மீது முதன்மையான கவனம் செலுத்தும் நேரத்தில், அரசியல் கட்சிகளை முக்கியமான பங்குதாரர்களாக தேர்தல் கமிஷன் கருதுகிறது. கட்சிகளின் கருத்துகள், கேள்விகளை மற்றும் பரிந்துரைகளை நாங்கள் மதிக்கிறோம். நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட முழுமையான உண்மையை எழுத்துப்பூர்வமாக பதிலாக அளிப்போம். இவ்வாறு அந்த பதிவில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAMAKRISHNAN NATESAN
பிப் 07, 2025 21:24

ராகுலுக்கு முட்டுக்கொடுப்பவர்கள் கவனிக்கணும் ........ ராகுல் இந்த குற்றச்சாட்டை இப்போது ஏன் வைக்கிறார் ?? மஹா தேர்தல் முடிவு வந்த பொழுது எங்கே இருந்தார் ?? ஏன் வியட்நாம் சென்றார் ??


S.Martin Manoj
பிப் 07, 2025 19:51

உங்க எஜமானர்களிடம் கேட்டு நல்ல விளக்கம் கொடுக்கவும்


Duruvesan
பிப் 07, 2025 20:12

யாரு சோரஸ் கிட்டயா ?


RAMAKRISHNAN NATESAN
பிப் 07, 2025 20:29

அப்போ அறுபதாண்டுகளாக காங்கிரசுக்கு அடிமையாக இருந்ததா தேர்தல் கமிஷன் ??


GoK
பிப் 07, 2025 19:10

இந்த அரசியல் அரைவேக்காடு,அண்டப்புளுகன்,ஆகாசப்புளுகன், சொன்னதையே சொல்லும் கீறல் விழுந்த கிராமோபோன் தட்டு, புத்தி மிக மட்டு.


sampath, k
பிப் 07, 2025 18:09

100% door to door verification is absolutely warranted.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை