உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான விபத்து விசாரணை குழு தலைவருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு

விமான விபத்து விசாரணை குழு தலைவருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் குழுவின் தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அவருக்கு, 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு புறப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானம் கடந்த, 12ம் தேதி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், 274 பேர் உயிரிழந்தனர்.

விசாரணை

இந்த விபத்து குறித்து ஏ.ஏ.ஐ.பி., எனப்படும் விமான விபத்து புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இப்பிரிவின் தலைவராக இயக்குநர் ஜெனரல் யுகேந்தர் உள்ளார். இவரது தலைமையின் கீழ் விமான மருத்துவப் பிரிவு, விமான போக்கு வரத்து கட்டுப்பாடு, அமெரிக்க அரசின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு, விபத்துக்குள்ளான விமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து விமானி அறையில் பதிவாகும் உரையாடல்கள் மற்றும் விமான இயக்க பதிவுகள் உள்ளிட்டவை அடங்கிய கருப்பு பெட்டிகளை பாதுகாப்பு படையினர் மீட்டு, விசாரணை குழுவிடம் கடந்த 24ம் தேதி ஒப்படைத்தனர்.இதைத்தொடர்ந்து, விமான விபத்து தொடர்பான விசாரணை தீவிரம்அடைந்துள்ளது.இந்நிலையில், விசாரணை குழு தலைவரான யுகேந்தரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

மத்திய ரிசர்வ் படை

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அவருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

ஊழியர்கள் நீக்கம்

'ஏர் இந்தியா' விமானம் விபத்துக்குள்ளான சில தினங்களில், அந்நிறுவனத்தின் சரக்குகளை கையாளும் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள், பார்ட்டி வைத்து ஆடிப்பாடி கொண்டாடிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், ஊழியர்களின் செயலுக்கு, ஏர் இந்தியா நிறுவனம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், 'துயரமான சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். சமீபத்தில் வெளியான வீடியோவிற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இதை மட்டுமே வைத்து எங்களை மதிப்பிடவேண்டாம். பொறுப்பு தவறி நடந்துகொண்ட நான்கு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kasimani Baskaran
ஜூன் 29, 2025 10:41

பாரம்பரிய பிரச்சினைகளை கண்டறிய உதவும் பிரச்சினை தீர்க்கும் தொழில்நுணுக்கம் மிக முக்கியமானது. அதை வைத்து இந்தப் பிரச்சினையை அணுகலாம். ஆங்கிலத்தில் இருந்ததால் அதை ஏன் கத்தரித்து விட்டீர்கள் என்று புரியவில்லை. எந்தப்பிரச்சினையையும் அதன் வேர்வரை சென்று மூலகாரணத்தை கண்டுபிடித்து தீர்ப்பது என்பது எளிதாக தோன்றினாலும் சிக்கல் மற்றும் சவால்கள் நிறைந்தது. அதில் பயிற்சி மற்றும் முன்னனுபவம் பெற்றவர்கள் வெகு சிலரே.


Kasimani Baskaran
ஜூன் 29, 2025 08:53

போயிங் விமான நிறுவனம் அமெரிக்க பொருளாதாரத்துக்கு முக்கியம். அவர்களுக்கு போட்டி பிரான்ஸ் நிறுவன ஏர்பஸ். பல காலமாக போயிங்கின் தரக்கட்டுப்பாடு சரியில்லை. சிறப்பான பராமரிப்பு மூலமே இதை மறைக்க முடியும். இந்திய விமான நிறுவனங்கள் உட்பட பல சர்வதேச விமான நிறுவனங்கள் கூட கோவிட்டுக்கு பின்னர் செலவுகளை குறைப்பதில் பராமரிப்பில் சமரசம் செய்து கொண்டுதான் லாபம் பார்க்கின்றன. கூடுதலாக பட்ஜெட் விமான நிறுவனங்களின் போட்டி வேறு.


Padmasridharan
ஜூன் 29, 2025 07:37

சாமியோவ், இத்தனைக்கு ஒரு கோடி ரூபாய் இறந்து போன மருத்துவ இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்டதா விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு கொடுப்பது போல


சந்திரன்,போத்தனூர்
ஜூன் 29, 2025 08:55

அங்கென்ன திராவிட மாடல் அரசா நடக்கிறது இழப்பீடு பணம் கொடுக்காமல் ஏமாற்றுவதற்கு? கண்டிப்பாக பெரிய தொகை இழப்பீடாக கொடுப்பார்கள் அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.


SUBBU,MADURAI
ஜூன் 29, 2025 04:20

இந்த விமானம் அமெரிக்க போயிங் நிறுவனத்தின் தயாரிப்பாகும். விபத்துக்குள்ளான இந்த விமானத்தில்தான் கோளாறு இருந்து விபத்து நடந்ததே தவிர அதை ஓட்டிய நம் இந்திய விமானிகளால் அந்த விபத்து நேரவில்லை. எனவேதான் விபத்துக்குள்ளான அநத விமானத்தின் கருப்புப் பெட்டியை அமெரிக்காவிற்கு எடுத்து சென்று அதை சோதனை செய்து விபத்து நடந்தது எப்படி என்று தாங்கள் அறிவிப்பதாக அமெரிக்கா மற்றும் அதை தயாரித்த போயிங் நிறுவனமும் அந்த கருப்புப் பெட்டியை கேட்டார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்த நம் இந்திய அரசு அந்த கருப்பு பெட்டியை நாங்களே சோதனை செய்து விபத்துக்கான காரணத்தை அறிவிப்போம் என்று கூறி விட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அமெரிக்கா மேற்கொண்டு இவ்விஷயத்தில் தலையிட முடியவில்லை. அவர்கள் கூறியது போல் நம்முடைய இந்திய அரசு அந்த கருப்பு பெட்டியை அவர்களிடம் கொடுத்தால் விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு இருந்தாலும் அதை மறைத்து விபத்துக்கான உண்மையான காரணத்தை சொல்ல மாட்டார்கள். அப்படி இயந்திர கோளாரால்தான் இந்த விமானம் விபத்துக்குள்ளானது என்ற உண்மை தெரிந்தால் அந்த அமெரிக்க போயிங் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை குறைந்து மற்ற நாடுகளிடம் தன் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் அதை உண்மையை மறைக்க நம் இந்திய விமானிகள் செய்த தவறுகளால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறி இந்த விபத்தை நம் விமானிகளின் தலையில் கட்டப் பார்த்தார்கள் அதற்கு நம் அரசாங்கம் இடம் கொடுக்காமல் நாங்களே அந்த கருப்புப் பெட்டியை ஆராய்ந்து விபத்துக்கான காரணத்தை கண்டு பிடிப்போம் என்று சொன்னதால் பதட்டம் அடைந்த அமெரிக்கா நம் விசாரனைக் குழு தலைவருக்கு இங்குள்ள அவர்களின் கைக்கூலி ஏஜெண்டுகளின் மூலம் அவரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது.


Mecca Shivan
ஜூன் 29, 2025 06:26

மிகச்சரியான கணிப்பு . ஏனென்றால் உலகெங்கும் இதுவரை குறைந்தது மூன்று அல்லது நான்கு டிரீம்லைனர் விமானங்கள் விபத்தை சந்திக்க இருந்தன. மேலும் முன்னாள் பொறியில் வடிவமைப்பாளர் ஒருவர் இந்த விமான தயாரிப்பு நிறுவனத்தில் இருந்தவர், இதில் வடிவமைப்பு குறைபாடுகள் உள்ளதாக அவர்களுக்கு தெரிவித்தும் ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர் சிங்கப்பூரில் இருப்பதால் அவருக்கு ஒன்றும் ஆகாது என்றும் நம்புவோம் ..இந்திய அரசு அவரின் ஆலோசனையும் ஏற்கவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை