உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சி; எக்ஸ் நிறுவனம் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சி; எக்ஸ் நிறுவனம் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ''உரிமைகோரல்கள் என நீதிமன்றத்தை, எக்ஸ் நிறுவனம் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது'' என எக்ஸ் நிறுவனம் மீது மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.'எக்ஸ்' சமூக வலைதளத்தில் (டுவிட்டர்), உள்ளடக்கம் மற்றும் கருத்துகளை தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்துவதாக கூறி, கர்நாடக ஐகோர்ட்டில் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. எக்ஸ் நிறுவனம் தனது மனுவில், ஐ.டி., சட்டத்தில் குறிப்பாக பிரிவு 79(3)(பி) ஆகிய பிரிவை மத்திய அரசு பயன்படுத்துகிறது. இது,ஆன்லைனில் தடையற்ற கருத்து பரிமாற்றத்தை தடை செய்வதுடன், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு எதிராக உள்ளது. சட்டப்பிரிவு 69ஏ விதிமுறைகளை மீறி, இணையதள உள்ளடக்கத்தை தடுக்க ஐ.டி., சட்டத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது எனக்கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தீங்கிழைக்கும் பதிவுகளை தடுக்கும் வகையில் சமூக ஊடக தளங்களை இயக்கும் சட்டம் குறித்து, எக்ஸ் நிறுவனம் தவறான தகவல்களை பரப்புகிறது. உரிமைகோரல்கள் என நீதிமன்றத்தை, எக்ஸ் நிறுவனம் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்துவதாக கூறி, எக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஏப்ரல் 3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

naranam
மார் 29, 2025 11:13

எக்ஸ் நிறுவனத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். டிக்டாக் பயன்பாட்டை ஒதுக்கியது போல. இந்தியர்கள் எக்ஸ் பயன்பாட்டையும் நிறுத்த வேண்டும். மிகுந்த தலைக்கனம் கொண்ட இலான் மஸ்குக்கு தக்க பாடமாக இது அமையும்.


Sampath Kumar
மார் 29, 2025 10:47

நீதிபதிகளே நிதிக்கு பின்னாடி போகும் அவலம் உள்ள நாட்டில் யாரு பூனைக்கு மணி கட்டுவது போவியா


சமீபத்திய செய்தி