உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரு மாடல் பைக்குகள் விலையை குறைத்தது யமஹா

இரு மாடல் பைக்குகள் விலையை குறைத்தது யமஹா

புதுடில்லி, 'யமஹா' நிறுவனம், 'ஆர் 3, எம்.டி., 03' ஆகிய இரு மாடல்களின் விலையை, 1.10 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது.இதுகுறித்து, இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'ஆர் 3, எம்.டி., 03 ஆகிய பிரீமியம் இருசக்கர வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. 'இதனால், இந்த இரண்டு இருசக்கர வாகனங்களின் விலை, 1.10 லட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. 'இதன்படி, ஆர் 3 விலை 3,59,900 ரூபாய் ஆகவும், எம்.டி., -03 விலை, 3,49,900 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது. இந்த விலை, இன்று முதல் அமலுக்கு வருகிறது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி