உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஜி.எஸ்.டி., மோசடி: முதலிடத்தில் மும்பை!

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஜி.எஸ்.டி., மோசடி: முதலிடத்தில் மும்பை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டில் கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், ரூ.2.01 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை முதலிடத்தில் உள்ளது.இது தொடர்பாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் ரூ.1 .01 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி நடந்தது. அதுவே 2023- 24ம் நிதியாண்டில் ரூ.2.01 லட்சம் கோடி ஆக அதிகரித்து உள்ளது. இது குறித்த பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. அந்நகரில் ரூ.70,985 கோடி மோசடி நடந்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் டில்லி, புனே, குருகிராம் உள்ளன.டில்லியில் ரூ.18 , 313 கோடியும், புனே நகரில் ரூ.17,328 கோடியும், குருகிராம் நகரில் ரூ.15,502 கோடியும், ஹைதராபாத்தில் ரூ.11,081 கோடியும் வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளது.

துறை வாரியாக

ஆன்லைன் விளையாட்டில் ரூ.81,875 கோடிவங்கி, நிதி மற்றும் காப்பீட்டு துறையில் ரூ.18,961 கோடிஇரும்பு, காப்பர், மற்றும் உலோக துறையில் ரூ .16,806 கோடிபான் மசாலா, புகையிலை, பீடி,சிகரெட் ஆகியவற்றில் ரூ.5,794 கோடி பணி ஒப்பந்த துறையில் ரூ.2,846 கோடிபிளைவுட், டிம்பர் மற்றும் பேப்பர் ஆகியவற்றில் ரூ.1,196 கோடிமின்னணு பொருட்களில் 1,165 கோடிமார்பிள், கிரானைட் மற்றும் டைல்ஸ் ஆகியவற்றில் ரூ.315 கோடி மருந்து துறையில் ரூ.40 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது.ஜிஎஸ்டி ஏய்ப்பு தொடர்பாக 4,872 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் (2022- 23) 4,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
செப் 16, 2024 07:14

என்ன தான் சொன்னாலும் இந்த விஷயத்தில் வட இந்தியா தான் டாப். எத்தனை வருடங்கள் ஆனாலும் தமிழ்நாடு வட இந்தியாவை இந்த மாதிரி விஷயங்களில் முந்த முடியாது!


S Sivakumar
செப் 15, 2024 21:56

இதற்கு வழக்கு தேவையில்லை. சுட்டு தள்ளி விட்டு அதன்‌ தீவிரத்தை உணர்த்த வேண்டும்


அப்பாவி
செப் 15, 2024 18:35

பன், பட்டர் ஜாம் துறையில் ஊழலைத் தேடிக் கிட்டிருக்காங்க. ஒரு பத்துரூவா மாட்டுனாலும் போதும். அவரை தூக்கி உள்ளே வெச்சுருவோம். பேக்கரி ஆளுங்க உஷாரா இருங்கணும்.


Velan Iyengaar
செப் 15, 2024 15:23

இந்த லிஸ்டில் எதோ தப்பு இருக்கு ...


Velan Iyengaar
செப் 15, 2024 15:22

குஜராத் இல்லாதது பலத்த சந்தேகத்த எழுப்புது ... சூரத் ... காந்திகர் ... அகமதாபாத் ....இது இல்லாத லிஸ்ட் லிஸ்ட் இல்ல ... என்னவோ தப்புனு இந்த லிஸ்டில் ....


வாய்மையே வெல்லும்
செப் 15, 2024 19:58

தமிழ்நாடும் இருக்கவேண்டியது.. இங்க கஞ்சா விற்றே சம்பாதிக்கிறார்கள். அதற்கு ஜீ எஸ் டி போடச்சொல்லி அமைதி கடைக்காக்கும் மக்கள் உழுந்து புரண்டு கேட்கிறார்கள்.. சரியா பொய்யனாரே ?


பல்லவி
செப் 15, 2024 13:34

வடக்கு ஏமாற்றுவதில் வல்லவர், நாம் பன் பட்டர் தகராறு மட்டும் செஞ்சாலும் ஏமாற்றப்படுகிறோம் என்பது உண்மை , இதனால் ஏய்ப்பு வல்லுனர்கள் ஒன்றாக கோவையில்கூடி வந்து முகாமிட்டு…


M Ramachandran
செப் 15, 2024 12:42

அப்போது மும்பைய்யகார் புத்திசாலிகள் நாம் என்ன இந்த திருட்டில் பின் தங்கி யிருக்கிறோமா. அடுத்த ஆண்டுக்குள் நாம் எல்லோரையும் முந்தி விடுவோம். இப்போர் என்ன செய்வாங்க ஹா ஹா