உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு இன்று எல்லோ அலர்ட் முடிவுக்கு வருகிறது தென்மேற்கு பருவமழை

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு இன்று எல்லோ அலர்ட் முடிவுக்கு வருகிறது தென்மேற்கு பருவமழை

மூணாறு: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இன்று முடிவுக்கு வரும் நிலையில் எட்டு மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்த ஆண்டு மே 24ல் துவங்கியது.இன்றுடன் பருவமழை முடிவுக்கு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது.

மண்சரிவு

இடுக்கி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்த நிலையில்,அடிமாலி பகுதியில் பலத்த மழை பெய்தது. அதனால் அடிமாலி அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமமான மச்சிபிளாவ், சூரகெட்டான்குடியில் நேற்று முன்தினம் இரவு மண்சரிவு ஏற்பட்டது.அதில் அருண் 35, என்பவரின் வீடு சேதமடைந்து, அவர் மண்ணிற்குள் சிக்கினார். தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயமடைந்ததுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது மனைவி, பிள்ளைகள் ஆகியோர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்ததால் தப்பினர். எல்லோ அலர்ட் மாநிலத்தில் திருவனந்தபுரம், இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர்,பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ