உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூரு: பெங்களூருக்கு, 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை முதல் பெங்களூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பணிக்குச் செல்வோர், மாணவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. 'பெஞ்சல்' புயலால் கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா பகுதிகளில் நகர்ந்து வருகிறது. இதனால், இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று முதல் நாளை வரை கர்நாடகாவில் உள்ள சில மாவட்டங்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.பெங்களூரு, ஹாசன், மாண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 6 முதல் 11 செ.மீ., வரை மழை பெய்யக்கூடும்.உடுப்பி, சிக்கமகளூரு, சிக்கபல்லாபூர் ஆகிய மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 11 முதல் 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை