உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேற்று ஆந்திரா; இன்று ஜார்க்கண்ட்; பஸ்சில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு

நேற்று ஆந்திரா; இன்று ஜார்க்கண்ட்; பஸ்சில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பு

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பஸ்சில் திடீரென தீ பற்றியது. இந்த விபத்தில் பயணிகள் 40க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினர்.ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி- ராஞ்சியில் இருந்து சத்ராவுக்குச் சென்று கொண்டிருந்த பஸ் லோஹர்தகா நெடுஞ்சாலையில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சில் தீ பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.இந்த விபத்து குறித்து போலீசார் கூறியதாவது: பஸ்ஸில் தீ பற்றி எரிந்த போது பயணிகள் 45 பேர் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக, பஸ் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டனர். சிறிது நேரத்தில் தீயணைப்பு வாகனம் வந்தது. அதற்குள், உள்ளூர் கடைக்காரர்கள் தீயை அணைத்தனர். பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பஸ் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், நேற்று (அக்டோபர் 24) பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில் தீப்பிடித்து 20 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை