உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓடும் ரயிலில் வலியால் துடித்த கர்ப்பிணி: வீடியோ அழைப்பில் பிரசவம் பார்த்த இளைஞர்

ஓடும் ரயிலில் வலியால் துடித்த கர்ப்பிணி: வீடியோ அழைப்பில் பிரசவம் பார்த்த இளைஞர்

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ரயிலில் இருந்து இறக்கிய இளைஞர், டாக்டரை 'வீடியோ' அழைப்பில் தொடர்பு கொண்டு அவரது உதவியுடன் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. இளம்பெண் மஹாராஷ்டிராவின் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 15ம் தேதி பிரசவத்துக்காக தன் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் மும்பை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், குழந்தை பிறக்க சில நாட்கள் ஆகும் என கூறியுள்ளார். இதனால், ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் ஓடும் ரயிலில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அப்பெண், குழந்தையை பிரசவிக்கும் நிலையை அடைந்துள்ளார். இதை பார்த்த சக பயணியான விகாஸ் திலிப், உடனே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். ஜோகேஸ்வரிக்கும், கோரேகாவ்னுக்கும் இடையே உள்ள ராம் மந்திர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அங்கு டாக்டர்களோ, மருத்துவ வசதியோ, ஆம்புலன்ஸ் வசதியோ இல்லை. இதனால் திலிப் உடனே தன் தோழியான டாக்டர் தேவிகா தேஷ்முக்கை, 'வீடியோ' அழைப்பில் தொடர்பு கொண்டார். பாராட்டு அவரின் வழிகாட்டுதல் படி ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே சிறிய தடுப்பு ஏற்படுத்தி அந்த கர்ப்பிணிக்கு திலிப் பிரசவம் பார்த்தார். இதில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து அந்த பெண்ணையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். சரியான நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்ட திலிப்பை மும்பை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sudha
அக் 17, 2025 11:39

அந்த ரயிலில் ஒரு பெண் பயணி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது


Ramesh Sargam
அக் 17, 2025 08:31

தமிழகத்தில் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு என்ன ஆகியிருக்குமோ, நினைத்தாலே மனசு திக் திக் என்று அடித்துக்கொள்கிறது. நாட்டுக்கு அந்த இளைஞனைப்போன்று பலர் வரவேண்டும். விகாஸ் திலிப் மற்றும் அவனுக்கு உதவிய மருத்துவர் தேவிகா தேஷ்முக் மிகவும் பாராட்டப்படவேண்டியவர்கள்.


KRISHNAN R
அக் 17, 2025 07:51

வாழ்த்துக்கள்


Field Marshal
அக் 17, 2025 07:29

நாம் பீடா வாயன் வடக்கன்ஸ் என்று நக்கலடிப்பதில் காலத்தை செலவழிக்கிறோம்


Rangarajan Cv
அக் 17, 2025 07:19

Indeed impressive


அப்பாவி
அக் 17, 2025 06:43

இனி ஒவ்வொரு ரயிலிலும் ஒரு ஆஸ்பத்திரி / முதலுதவி கோச் ஓட்டலாமே...


தியாகு
அக் 17, 2025 09:15

நீ காமெடி செய்ய வேறு செய்தியே கிடைக்கலையா, நல்ல புத்தகங்களை படித்து உலக அறிவை வளர்த்துக்கொள்.


duruvasar
அக் 17, 2025 11:28

நல்ல கருத்தை முன்வைத்த முரசொலி வாசகருக்கு நன்றி. தமிழக அரசு பஸ்களில் இந்த தேவையே இருக்காது. பிரசவம் ஆக வேண்டுமென்றால் அரசு பஸ்சில் எரினால் போதும்.


K.Ravi Chanaran ,Pudukkottai
அக் 17, 2025 06:07

கடவுள் என்றும் மனித உருவில்தான் வருவார் என்பது உண்மைதான்.


Vasan
அக் 17, 2025 06:52

சரியாக சொன்னீர்கள். அந்த குழந்தையும், பெற்றோர்களும் நலமாக இருக்க வாழ்த்துக்கள். அந்த இளைஞருக்கும் அவரது தோழியான மருத்துவருக்கும் மனமார்ந்த நன்றிகள். மேலும், 50 கிலோமீட்டர் க்கு ஒரு இடத்திலாக ரயில் நிலையத்திலேயே மருத்துவமனை இருந்தால் நன்றாக இருக்கும். இதனை செலவாய் பார்க்காமல் சேவையாக கருதி ரயில்வே துறை செய்ய பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.


புதிய வீடியோ