உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாடியில் இருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு

மாடியில் இருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு

புதுடில்லி:வீட்டு மாடியில் இருந்த தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார். தெற்கு டில்லி சத்தர்பூர் ஏ- பிளாக்கில் வசித்தவர் விஷால் கவுர், 19. நேற்று அதிகாலை 12:45 மணிக்கு வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்தார். தகவல் அறிந்து சென்ற நடந்த மைதான் கார்ஹி போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த விஷாலை மீட்டு, மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். மாடியில் இருந்து விழுந்த விஷால், பலத்த காயம் அடைந்த நிலையிலும், தரையில் தன் குடும்பத்தினரின் மொபைல் போன் எண்ணை, ரத்தத்தால் எழுதியுள்ளார். அதை வைத்தே போலீசார் அவருடையை குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, இறந்தவர் விஷால் என்பதை கண்டுபிடித்தனர். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !