உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காட்டு யானை தாக்கி கேரளாவில் இளைஞர் பலி

காட்டு யானை தாக்கி கேரளாவில் இளைஞர் பலி

திருச்சூர் : கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில், சாலக்குடி அருகேயுள்ள அதிரப்பள்ளியை சேர்ந்தவர் செபாஸ்டியன், 20. பழங்குடியினத்தைச் சேர்ந்த செபாஸ்டியனும், அவரது நண்பர்கள் மூவரும் சேர்ந்து, தேன் சேகரிப்பதற்காக வனப்பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு சென்றனர். தேன் சேகரித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அடர்ந்த இருட்டு பகுதியில் நின்றிருந்த காட்டு யானை அவர்களை துரத்தியது.இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் சிதறி ஓடத் துவங்கினர். மூவர் தப்பியோடிய நிலையில், செபாஸ்டியன் மட்டும் யானையிடம் சிக்கிக் கொண்டார். தவறி கீழே விழுந்த அவரை, யானை மிதித்து கொன்றது. தகவல் அறிந்த போலீசார், செபாஸ்டியன் உடலை மீட்டனர். வனத்துறையினரும், போலீசாரும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை