உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., எம்.பி., பிரியங்கா வாகனத்தை வழி மறித்த சேட்டை வாலிபர் கைது

காங்., எம்.பி., பிரியங்கா வாகனத்தை வழி மறித்த சேட்டை வாலிபர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சூர்: கேரளாவில் காங்., எம்.பி., பிரியங்கா வாகனத்தை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட யுடியூபர் அனீஷ் ஆபிரகாமை போலீசார் கைது செய்தனர்.வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா தனது தொகுதி மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் மலப்புரம் வந்தூரில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில், பிரியங்கா சென்ற காரை வழிமறித்து வாலிபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மன்னுத்தி போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். ஏலநாடு பகுதியை சேர்ந்த யுடியூபர் அனீஷ் ஆபிரகாம் என்பது தெரியவந்தது. அந்த வாலிபரின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா சென்ற காரை திடீரென வழிமறித்த காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அனீஷ் ஆபிரகாமை போலீசார் ஜாமினில் விடுவித்தனர். அதேநேரத்தில், எம்.பி., பிரியங்காவின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mediagoons
மார் 31, 2025 20:21

பாஜவினருக்கும் இந்துமதவாதிகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கலாம்


Nagarajan D
மார் 31, 2025 20:01

எல்லாம் ஒரு விளம்பரம்தான் இருவருக்குமே


M Ramachandran
மார் 31, 2025 19:06

சேதி ஒரு தம்மபட்டம்.


Barakat Ali
மார் 31, 2025 18:01

அனீஷ் ஆப்ரஹாம் இன்னும் பிரபலம் ஆகவேண்டாமா ????


R S BALA
மார் 31, 2025 14:15

ஒரு MP அவர்களை அதுவும் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை வழிப்போக்க அயோக்கியர்கள் வழிமறிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது..


naranam
மார் 31, 2025 13:53

இதெல்லாம் ஒரு செய்தி என்று நீங்களும் போடுகிறீர்கள் ?