உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திராவில் பரிகார பூஜை செய்த ஒய்.எஸ்.ஆர்.காங்., நிர்வாகிகள்

ஆந்திராவில் பரிகார பூஜை செய்த ஒய்.எஸ்.ஆர்.காங்., நிர்வாகிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: திருப்பதி லட்டு குறித்து பொய் தகவல் தெரிவித்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாவம் செய்து விட்டதாகக் கூறி, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் அறிவிக்கப்பட்ட பூஜைகளில், ஒய்.எஸ்.ஆர்.காங்., நிர்வாகிகள் நேற்று ஈடுபட்டனர்.திருமலை ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினர். இது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றச் சாட்டுகளை, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்.காங்., மறுத்துள்ளது. மேலும், சந்திரபாபு நாயுடு அரசியலுக்காக, பொய் தகவல்களை வெளியிட்டதாகக் கூறியது. அரசியலுக்காக லட்டுவின் புனிதத்தன்மையை இழிவுபடுத்தி சந்திரபாபு நாயுடு செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடும் வகையில் பூஜைகள் செய்யப்படும் என்றும் ஜெகன்மோகன் கட்சி அறிவித்திருந்தது. இதன்படி, ஆந்திராவின் பல கோவில்களில், அக்கட்சி நிர்வாகிகள் நேற்று பரிகார பூஜைகளில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Lion Drsekar
செப் 29, 2024 21:23

நீ செய்ததே மிகப்பெரிய பரிகார பூசைதான் . ஆட்டுக்கறி மற்றும் சிக்கன் பிறையும் கொடுத்திருந்தாலும் பக்தர்கள் குரல்கொடுக்கமாட்டார்கள் அதுதான் இந்துக்களின் ஒற்றுமைக்கு, ஒரு முன்னுதாரணம்,


sankaranarayanan
செப் 29, 2024 07:53

நான் கிருஸ்துவன்தான் என்று அப்படாமாக ஒப்புத்துக்கொண்ட ஜெகன் நீ சொன்னது உண்மைதான் ஒப்புத்துக்கொண்டாய் பிறகு நீ ஏன் கோவிலின் நுழைவாயிலுள்ள புத்தகத்தில் திருமலையான் மீது நம்பிக்கை எனக்கும் உன்டு என்று வாசகத்தை எழுதி கையொப்பமிட மறுக்கிறாய் காலம் காலமாக நடந்து வரும் இந்த சம்பிரதாயத்தை நீ ஏன் முறுயடிக்கிறாய் உனக்கு பைபிளின் மீது மறியாதை இருந்தால் அதை யாருமே தடுக்கவில்லை ஆனால் இந்து மதத்தை ஏன் அவமானப்படுத்துகிறாய்


raja
செப் 29, 2024 07:43

கிரிப்டோகளை இந்து கோயில்களுக்கு தர்ம கர்தாவாக நியமித்த கேடுகெட்ட இழி பிறவி கோவால் புற திருட்டு திராவிட மாடல் கொள்ளையணின் ஒரே ஒன்கொள் தேசத்துகாரன் தான் இந்த ஜெகன்...


Kasimani Baskaran
செப் 29, 2024 06:56

எப்படி சந்தை விலையை விட நான்கில் ஒரு பங்கு விலைக்கு நெய் கொடுக்க முடியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் கோவில் நிர்வாகத்தில் எப்படி இருந்தார்கள் என்பது ஜெகனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். கோவில் நிர்வாகம் நெய் விற்ற நிறுவனத்தை மொத்தமாக கையகப்படுத்தி எப்படி இது போன்ற கேவலத்தில் ஈடுபட்டார்கள் என்பதை புரிந்து இது போல இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த நிறுவன உரிமையாளர்களை தினமும் திருப்பதி கோவில் பிராகாரத்தை சுத்தம் செய்ய வைக்கலாம்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 29, 2024 06:22

பரிகார பூஜை செய்வதில் கூட கலப்படம். இவர் செய்த பாவத்திற்கு பரிகார பூஜை அதில் கூட கலப்படம் செய்து சந்திரபாபு நாயுடு பெயரை இழுத்து விட்டு உள்ளார். மிகவும் கைதேர்ந்த கலப்பட கிறிஸ்துவ வியாபாரி.


சாண்டில்யன்
செப் 29, 2024 06:08

நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்ததில் கோவிலின் புனிதம் கெட்டது என்கிறார்கள் நிவர்த்திக்கு மாட்டு மூத்திரம் தெளித்தார்களோ? முள்ளை முள்ளால் எடுக்கணும்னு ஒரு பழமொழி


J.V. Iyer
செப் 29, 2024 04:11

ஜெகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்.காங்., எல்லோரும் பாவிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை