உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாடு முழுதும் பிரசாரம் செய்ய உள்ளார். இதை கருத்தில் வைத்து அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, உளவுத் துறை பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், கார்கேவுக்கு உயர் பாதுகாப்பு பிரிவான, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கார்கேவுக்கு 30 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மூன்று ஷிப்டுகளாக, 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவர். இவர்கள் கார்கே உடன், இந்தியா முழுக்க பயணிப்பர். மேலும், துப்பாக்கி குண்டு துளைக்காத வாகனம், பைலட் மற்றும் எஸ்கார்ட் வாகனங்களும் இந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் அடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை