உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இப்ப புரியுதா நாங்க படும்பாடு; சொமேட்டோ சி.இ.ஓ., அலைக்கழிப்பு; ஒரு பதிவால் நிகழ்ந்த மாற்றம்

இப்ப புரியுதா நாங்க படும்பாடு; சொமேட்டோ சி.இ.ஓ., அலைக்கழிப்பு; ஒரு பதிவால் நிகழ்ந்த மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : டில்லியில் பிரபல மாலில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை டெலிவரிக்காக வாங்கச் சென்ற சொமேட்டோ சி.இ.ஓ., தீபீந்தர் கோயல் அலைக்கழிக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ சி.இ.ஓ., தீபீந்தர் கோயல், தனது ஊழியர்களைப் போல, மனைவியுடன் சேர்ந்து டெலிவரி பணியில் ஈடுபட்டார். டில்லியில் உள்ள ஆம்பியன்ஸ் மாலில் செயல்பட்டு வரும் ஓட்டலில் ஆர்டர் செய்யப்பட்ட உணவை, டெலிவரிக்காக பிக்அப் செய்ய சென்றுள்ளார்.சொமேட்டோ ஊழியர்களின் சீருடையை அணிந்தபடி, அந்த மாலின் பிரதான நுழைவு வாயிலுக்கு சென்ற அவரை, அங்கிருந்து மால் பணியாளர்கள், மாற்றுப் பாதையில் வருமாறு கூறினர். பின்னர், மற்றொரு நுழைவு வாயிலுக்கு சென்ற போது, படிக்கட்டில் ஏறி செல்லுமாறு கூறியுள்ளனர். தொடர்ந்து, 3வது மாடிக்கு சென்ற தீபீந்தர் சிங், அந்த ஓட்டலின் முன் காக்க வைக்கப்பட்டார். அப்போது, அங்கிருந்த சக சொமேட்டோ ஊழியர்களுடன் கலகலப்பாக பேசி, குறைகளையும், நிறைகளையும் கேட்டறிந்தார். பின்னர், ஒரு வழியாக, உணவு ஆர்டரை வாங்கிச் சென்றார். உணவுகளை பிக்அப் செய்ய செல்லும் சொமேட்டோ ஊழியர்கள் அலைக்கழிக்கப்படுவதை உணர்ந்த சொமேட்டோ சி.இ.ஓ., தீபீந்தர் கோயல், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை மதிக்குமாறு ஆம்பியன்ஸ் மால் உள்பட அனைத்து மால் நிர்வாகங்களுக்கும் கோரிக்கை விடுத்தார். அவரது இந்தப் பதிவு வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட ஆம்பியன்ஸ் மால் நிர்வாகம், உணவு பிக்அப் செய்ய வரும் ஊழியர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கித் தருவதாக உறுதியளித்தது. அதற்கு தீபீந்தர் கோயல் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Lion Drsekar
அக் 08, 2024 10:04

இவர் உரிந்து கொண்டு தங்களின் ஊழியர்களின் வேதனைகளை புரிந்து கொண்டு ஆவன செய்வது போல், மூன்று எழுத்து படிப்பு, மக்கள் பிரநிதிகளும் முன்னாள் காவல் துறை டி ஜி பி திரு சி எல் ராமகிருஷ்ணன் போல் மக்களோடு மக்களாக பேருந்து மற்றும் ரயில்களில் பயணித்தால் மட்டுமே மக்களின் வேதனை புரியும், இவர்கள் மீது நேரடியாக சூரியஒளியும் படும், வைட்டமின் டி யம் கிடைக்கும், மக்களுக்கும் விடிவு பிறக்கும், வந்தே மாதரம்


Immanuel A
அக் 08, 2024 09:48

மொபைல் பார்த்து விட்டு போக வில்லை என்றால் ஆர்டர் செய்தவருக்கு உணவு கொண்டு செல்ல முடியாது ஏனென்றால் அதில் மேப் பார்க்க வேண்டியுள்ளது. அவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால் தெரியும் உங்களுக்கு


N.Purushothaman
அக் 08, 2024 07:22

உடல் உழைப்பால் செய்கிற எந்த வேலையும் தரக்குறைவானது அல்ல ....இதை சம்மந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் ....இது போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு குடும்பம் ,பிள்ளைகள் என உள்ளனர் ....ஏதோ ஒரு சூழலால் அல்லது வறுமை மற்றும் குடும்ப பின்னணியால் தான் அவர்கள் வேலைக்கு வருகின்றனர் ...


நிக்கோல்தாம்சன்
அக் 08, 2024 05:50

அவர்கள் சாலையிலும் மொபைலை பார்த்தபடி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுங்க தீபிந்தர்


Rajan
அக் 07, 2024 23:24

இதே மாதிரி மந்திரிகளும், அரசு உயர் நிலை அதிகாரிகளும் மாறு வேடத்தில் அரசு அலுவலகங்களுக்கு சென்றால் மக்கள் நிலை புரியும்


Natarajan Ramanathan
அக் 07, 2024 23:00

பெரும்பாலான நிறுவனங்கள் உணவு டெலிவரி அல்லது கூரியர் நிறுவன ஊழியர்களை லிஃப்ட்டில் செல்ல கூட அனுமதிக்காமல் படியேறி வருமாறு செய்வது மிகவும் அநியாயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை