உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூரில் உயர்கல்வி

உயர்தர கல்வி முறை, பன்முக கலாச்சார சூழல், சர்வதேச வாய்ப்புகள், சுகாதாரம், தூய்மை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற காரணங்களால், சர்வதேச மாணவர்களுக்கு தகுந்த இடமாக சிங்கப்பூர் உள்ளது. குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்ட உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது. முக்கிய கல்வி நிறுவனங்கள்:சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்: உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களில் தரவரிசையில் உள்ள என்.யூ.எஸ்., பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது.நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்: பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு பெயர் பெற்ற இப்பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் உயர்ந்த தரவரிசையில் உள்ளது.சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம்: வணிகம், மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றில் இப்பல்கலைக்கழகம் பல்வேறு படிப்புகளை வழங்குகின்றன.சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம்: பொறியியல் மற்றும் வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்றது.இவை தவிர, பல தனியார் நிறுவனங்கள், சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகள் போன்றவை சிறப்பு படிப்புகளை வழங்குகின்றன.தகுதிகள்:பள்ளி மற்றும் கல்லுரிகளில் அதிக மதிப்பெண்களுடன், ஆங்கிலப் புலமைத் தேர்வான டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., மதிப்பெண்களும் அவசியம்.உதவித்தொகை மற்றும் நிதி உதவி:ஆராய்ச்சி மாணவர்களுக்கான 'சிங்கப்பூர் சர்வதேச பட்டதாரி விருது' உட்பட பல்வேறு உதவித்தொகைகள் சிங்கப்பூர் அரசால் வழங்கப்படுகிறது. என்.யூ.எஸ்., மற்றும் என்.டி.யூ., போன்ற பல்கலைக்கழகங்கள் தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் பல்வேறு உதவித்தொகைகளை சர்வதேச மாணவர்களுக்கு வழங்குகின்றன. மேலும், பல சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பிற நாட்டு அரசாங்கங்களும் சிங்கப்பூரில் படிப்பதற்கான நிதி உதவியை வழங்குகின்றன.செலவுகள்:கல்விக் கட்டணம் அதிகமாக இருந்தாலும், உலக அளவில் மற்ற முக்கிய நகரங்களுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த செலவினங்கள் மிதமானதாகவே உள்ளது. தங்குமிடத்தின் வகை மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து மாதாந்திர செலவுகள் பரவலாக மாறுபடும். பொதுவாக மலிவு விலையில், ஏராளமான உணவு வகைகள் மற்றும் சிறந்த பொது போக்குவரத்து குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குகிறது.வேலை வாய்ப்புகள்:சிங்கப்பூரின் வலுவான பொருளாதாரம் பட்டதாரிகளுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. குறிப்பாக நிதி, தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உள்ளன. பல பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்புகளையும் வழங்குகின்றன. விபரங்களுக்கு: www.mfa.gov.sg


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !