சாதனையாளர்களை உருவாக்கிய பல்கலை.,
இது 1887ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் தேர்வுகளை மட்டுமே நடத்தி வந்தது. பின்னர் 1904ம் ஆண்டு முதல் படிப்புகளையும் வழங்க தொடங்கியது. 2005ம் ஆண்டு இது மத்திய பல்கலைக்கழகமாக்கப்பட்டது. இங்குள்ள துறைகள்: ஏன்ஷியன் ஹிஸ்டரி, கல்சர் அண்டு ஆர்கியாலஜி மெடிவல் அண்டு மாடர்ன் ஹிஸ்டரி ஆந்ரபாலஜி, அராபிக் அண்டு பெர்ஷியன் கல்வி பொருளாதாரம் இங்கிலிஷ் அண்டு மாடர்ன் ஈரோப்பியன் லாங்குவேஜஸ் புவியியல் இந்தி மியூசிக் அண்டு பெர்பார்மிங் ஆர்ட்ஸ் தத்துவம் பிசிக்கல் எஜுகேஷன் பொலிட்டிக்கல் சயின்ஸ் சைகாலஜி சமஸ்கிருதம் உருது ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேஷன் விஷுவல் ஆர்ட்ஸ் பைன் ஆர்ட்ஸ் சட்டம் பயோகெமிஸ்ட்ரி பயோஇன்பர்மேட்டிக்ஸ் தாவரவியல் வேதியியல் டிபன்ஸ் அண்டு ஸ்டாடர்ஜிக் ஸ்டடீஸ் எர்த் அண்டு பிளானட்டரி சயின்சஸ் எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் என்விரான்மென்டல் சயின்ஸ் கணிதம் போட்டோகிராபி இயற்பியல் உயிரியல் பயோஇன்பர்மேட்டிக்ஸ் அண்டு பயோடெக்னாலஜி புள்ளியியல் ஹோம் சயின்ஸ் அலகாபாத் பல்கலைக்கழத்தில் 17 ஹாஸ்டல்கள் உள்ளன. இவற்றின் பல்கலைக்கழத்தின் நேரடி கட்டுப்பாட்டியில் இயங்கும் 12 ஹாஸ்டல்களில் இன்டர்நெட் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழத்தில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இளநிலை, முதுநிலை, பி.சி.ஏ., எம்.சி.ஏ., டி.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., படிப்புகளுக்கு தனித்தனியாக நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மூன்று முன்னாள் பிரதமர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் படித்த பெருமையுடையது இந்த பல்கலைக்கழகம். முன்னாள் பிரதமர்கள் குல்சாரிலால் நந்தா, சந்திரசேகர், வி.பி.சிங், முன்னாள் ஜனாதிபதி ஷங்கர் தயாள் ஷர்மா, துணை ஜனாதிபதி கோபால் ஸ்வரூப் பதக் ஆகியோர் இங்கு படித்தவர்களே. உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் ஹேம்வதி நந்தன் பகுகுனா, பீகார் முன்னாள் முதல்வர் சத்யேந்திர நாராயண் சின்ஹா ஆகியோரும் இந்த பல்கலைக்கழக மாணவர்ளே. இது தவிர சுதந்திர போராட்ட வீரர்கள் கோபிந்த் பல்லப் பந்த், மோதிலால் நேரு, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, மகரிஷி மகேஷ் யோகி, கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் உட்பட பல சாதனையார்கள் அலகாபாத் பல்கலைக்கழத்தில் படித்தவர்களே.