உள்ளூர் செய்திகள்

மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி

நோய்களைக் கண்டறிவதில் கிளினிகல் டெஸ்டிங் லேபரடரிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. நோய் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் மெடிக்கல் லேபரட்டரிகளில் பணியாற்றுபவர்கள் திரை மறைவில் நின்று ஒரு மருத்துவர் முடிவெடுக்கத் தேவைப்படும் மிக முக்கிய அம்சங்களை பல்வேறு சோதனைகளின் வாயிலாக அறிந்து அவற்றை மருத்துவருக்குத் தருகின்றனர். இந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே நோயாளிக்கு உரிய சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்கின்றனர். மனித உடலில் பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள், நுண்ணுயிரிகள் போன் றவை உள்ளனவா என்ற ஆராய்ச்சியை இவர்களே செய்கின்றனர். மனிதஉடலிலுள்ள திரவங்கள், திசுக்கள், செல்கள் போன்றவற்றை சோதித்து அவற்றின் தன்மையை விளக்குவதன் மூலமாக ஒரு மருத்துவருக்கு உற்ற நண்பர்களாக இருப்பவர்களும் இவர்கள் தான். அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இத் துறையில் தற்போது இயந்திர மயமாக்கப்பட்ட சோதனைக் கருவிக்,ள நவீன உபகரணங்கள், ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை மேற் கொள்ளும் விலையுயர்ந்த உபகரணங்கள் போன்றவை பயன்பாட்டில் உள்ளன. மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி துறையில் இணைய விரும்புபவர்களுக்கு டிப்ளமோ மற்றும் இளநிலைப் பட்டப்படிப்புகள் தரப்படுகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவக் கல்லுõரிகளும், கல்வி நிறுவனங்களும் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜியில் பி.எஸ்சி., படிப்பைத் தருகின்றன. இதை முடிப்பவர்களுக்கு பி.எஸ்சி., எம்.எல்.டி., அல்லது பி.எம். எல்.டி., என்னும் பட்டம் தரப்படுகிறது.   இந்தப் படிப்பைப் படிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2வுக்கு நிகரான படிப்பை அறிவியல் புலத்தில் முடித்திருக்க வேண்டும். பி.எம்.எல்.டி., படிப்பை முடிக்க 3 ஆண்டு ஆகிறது. மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜியில் டிப்ளமோ படிப்பதற்கும் பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். இது 2 ஆண்டு காலம் படிக்கக் கூடிய படிப்பாகும்.   இத் துறையிலுள்ள இதர சான்றிதழ் படிப்புகளைப் படிப்பதற்கும் பிளஸ் 2 முடித்திருப்பது குறைந்த பட்சத் தேவையாக உள்ளது. சான்றிதழ் படிப்புகளை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயலாற்றும் மருத்துவ மனைகள் மூலமாகவும் படிக்கலாம். வாய்ப்புகள்: மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி படிப்பை முடிப்பவருக்கு சவால் மிகுந்த மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. தனியார் மற்றும் அரசுத் துறை சார்ந்த மருத்துவமனைகள், அவசர சிகிச்சைக்கான மையங்கள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், ரத்ததான மையங்கள் ஆகியவற்றில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. மருத்துவத்தில் தனியார் துறை வேகமாக வளர்ந்து வருவதை அறிவோம். இதில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள், நர்சிங்ஹோம்கள், ரத்த வங்கிகள், பேதாலஜி ஆய்வகங்கள் பெரும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. இவற்றில் லேபரட்டரி டெக்னீசியன்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. பணியனுபவமும் போதுமான துறையறிவும் பெற்ற மெடிக்கல் லேபரட்டரி டெக்னீசியன்களுக்கான கடுமையான தேவை உணரப்படுகிறது. மெடிக்கல் லேபரடரி டெக்னீசியன்கள் சொந்தமாக ஆய்வுக்கூடஙகள் நடத்திடவும் வாய்ப்புள்ளது. அதேபோல மருத்துவக் கல்லூரிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியப் பணியில் ஈடுபடும் வாய்ப்புகளும் உள்ளன. மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி முடித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள், பரிசோதனைக் கூடங்களில் ஓரளவு நல்ல சம்பளம் தரப்படுகிறது.   திறன் பெற்றவருக்கு எங்கும் வரவேற்பு உள்ளது. சொந்தமாக ஆய்வகங்களை வைப்பவர்கள் திறம்பட செயலாற்றினால் சிறப்பாக அவர்களால் வருமானம்பெற முடிகிறது. எனினும் பல ஆய்வகங்களில் இப் படிப்பை முடித்திருப்பவருக்கு சரியான சம்பளத்தை அவற்றை வைத்திருப்பவர்கள் தருவதில்லை. கல்வி நிறுவனங்கள்: திருவள்ளூரிலுள்ள ஸ்ரீராம் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ்அண்ட் சயின்ஸ் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள டாக்டர் என்.ஜி.பி., ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் ஆகியவற்றில் பி.எஸ்சி., படிப்புகளைப் படிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்