உள்ளூர் செய்திகள்

டிவி மற்றும் ஒளிபரப்பு நிர்வாகம்

மும்பையில் உள்ள விசிலிங் வுட்ஸ் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் பிலிம், டெலிவிஷன், அனிமேஷன் அண்டு மீடியா ஆர்ட்ஸ் என்ற கல்வி நிறுவனம் ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பாக டெலிவிஷன் அண்டு புராட்க்காஸ்டிங் ஸ்ட-டீஸ் (டி.வி. பி.எஸ்.,) படிப்பை வழங்குகிறது. டிவி மற்றும் ஒளிபரப்பு சூழல் குறித்து இந்த படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. இந்த படிப்பு இரண்டு பிரிவாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் பிசினஸ், மேனேஜ்மென்ட் அண்டு ஆபரேஷன் பிரிவையோ, புரடக்ஷன் அண்டு கிரியேட்டிவ் பிரிவையோ தேர்வு செய்து மாணவர்கள் படிக்கலாம். வகுப்பறை பாடங்களை தாண்டி, நிஜமான ஒளிபரப்பு சூழல், துறையின் உண்மை நிலவரங்கள் குறித்து இந்த படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. இதனால் இந்த துறையின் பணிச்சூழலையும், தற்போதைய டிரெண்ட் குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். தயாரிப்பு நிறுவனங்கள், மீடியா நிறுவனங்கள், சினிமா துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த ஓராண்டு படிப்பில் சேர பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இதற்கான கட்டணம் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.whistlingwoods.net என்ற வெப்சைட்டை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !