உள்ளூர் செய்திகள்

டில்லி பல்கலை.,யில் இரட்டை டிகிரி முறை

பிசிக்ஸ் மற்றும் அஸ்ட்ரோ பிசிக்ஸ் ஆகிய துறைகளுடன் சேர்த்து நியூக்ளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியை கற்கும் இரட்டை டிகிரி கடந்த ஆண்டு அறிமுகமானது. இதற்காக ஏழு பிரான்ஸ் கல்வி நிறுவனங்களுடன் டில்லி பல்கலைக்கழகம் இணைந்து செயல்பட்டது. டில்லி பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டு எம்.டெக்., பிரிவில் சேருபவர்களுக்கு மூன்றாவது மற்றும் நான்காவது செமஸ்டர் பாரிஸ் கல்வி நிறுவனத்தில் நடக்கும். அங்கு அவர்களுக்கு நியூக்ளியர் சயின்ஸ் துறையில் பட்டம் வழங்கப்படும். பிறகு ஐந்தாவது, ஆறாவது செமஸ்டர் டில்லியில் நடைபெறும். அங்கு எம்.டெக்., பிரிவுக்கான பட்டம் வழங்கப்படும். இரட்டை டிகிரி முறைக்காக ஒரு கல்வி நிறுவனம் மற்றொரு கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது இதுவே முதல்முறை. இதை டில்லி பல்கலைக்கழகத்தின் பிசிக்ஸ் மற்றும் அஸ்ட்ரோ பிசிக்ஸ் துறைத்தலைவர் ஆர்.கே.சிவ்புரி தெரிவித்தார். இணைந்து செயல்படும் ஏழு பிரான்ஸ் கல்வி நிறுவனங்கள்: பாரிஸ் பல்கலைக்கழகம்,பாரிஸ் டெக்,இகோல் சென்ட்ரல்,சபிலெக்,ஐ.என்.எஸ்.டி.என்.,இ.டி.எப்., மற்றும் அரீவா,இகோல் பாலிடெக்னிக்.இரட்டை டிகிரி முறையின் வரவேற்பை பொறுத்து அதன் விரிவாக்க திட்டம் இருக்கும் என டில்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்ற ஆண்டு 12 எம்.டெக்., மாணவர்கள் டில்லி பல்கலைக்கழகத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு இரட்டை டிகிரி முறை படிப்புக்காக அனுப்பப்பட்டனர்.டில்லி எம்.டெக்., மாணவர்கள் நியூக்ளியர் சயின்ஸ் பட்டத்திற்காக பிரான்ஸ் கல்வி நிறுவனத்திற்கு செல்லும் போது அவர்களுக்கு ஐந்து பிரிவுகள் கற்றுத்தரப்படுகிறது. நியூக்ளியர் இன்ஜினியரிங்,ஆப்பரேஷன்ஸ்,நியூக்ளியர் பிளான்ட் டிசைன்,வேஸ்ட் மேனேஜ்மென்ட்,பியூல் சைக்கிள்.பிரான்ஸ் நாட்டின் 75 சத-வீத மின்சாரம் நியூக்ளியர் எனர்ஜியில் இருந்து பெறப்படுகிறது. இதனால் இந்த படிப்பு பிரான்ஸ் நாட்டில் சிறப்பான வேலை வாய்ப்புக்கு உதவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !