புத்துயிர் பெறுகிறதா ஐ.டி.,துறை
இதில் இந்திய ஐ.டி., துறை குறித்து பல தகவல்களை அவர் தெரிவித்தார். சமீபகாலமாக இந்திய ஐ.டி., துறை எழுச்சி பெறத் தொடங்கியிருப்பதாகவும் இதனால் மாணவர்கள் மத்தியில் ஐ.டி., குறித்த அவநம்பிக்கை எதுவும் தேவையில்லை என்றும் அவர் கூறினார். சர்வதேச அளவிலான ஐ.டி., வளர்ச்சி குறித்த குறியீடுகள் நம்பிக்கையளிக்கும் வண்ணம் இருப்பதாக அவர் தெரிவித்தார். சர்வதேச அளவில் ஐ.டி., துறை கடந்த சில மாதங்களாக பலவீனமாக இருந்தபோதும் இந்திய ஐ.டி., துறை இந்த சூழலிலும் ஓரளவு நம்பிக்கையளிப்பதாகவே செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆரோக்கியமான நிலையை தக்கவைத்துக் கொள்ள இந்திய ஐ.டி., நிறுவனங்கள் சில சிறிய மாற்றங்களை தங்களது செயல்பாட்டில் நடைமுறைப்படுத்தின. வாடிக்கையாளரை மையப்படுத்திய சேவை, வாடிக்கையாளரைத் தக்கவைப்பது, புதிய தொழில்நுட்பத்தை கடைப்பிடிப்பது, நிர்வாகச் செயல்பாடு குறித்த நடவடிக்கைகள் போன்ற உத்திகளை இந்த கால கட்டத்தில் இந்திய நிறுவனங்கள் கடைப்பிடித்தன. வெறும் கனவுகளை மட்டுமே நமது மாணவர்கள் காண்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் புதிய உத்திகளையும் அவர்கள் உருவாக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால இந்தியா வளர்ச்சியடைய முடியும் என்று ராமதுரை கூறினார். இப்போது ஐ.டி., துறையில் மீண்டும் எழுச்சி காணப்படுவதால் மாணவர்கள் வெறும் தொழில் நுட்ப வல்லமையைப் பெறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் துறை சார்ந்த திறன்களையும் முழுமையாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய ராமதுரை டி.சி.எஸ்., போன்ற இந்தியாவின் முன்னணி ஐ.டி., நிறுவனங்கள் பொருளாதாரத் தேக்க நிலையை ஒரு பின்னடைவாக எடுத்துக் கொள்ளாமல் புதிய உத்திகளை உருவாக்கி வாய்ப்புகளையும் அதிகப்படுத்தியிருப்பதாக கூறினார். சமீபத்தில் இந்திய ஐ.டி., துறை குறித்து வெளியாகும் தகவல்கள் அனைத்தும் நமது ஐ.டி., துறை குறித்த நம்பிக்கைகளை வளர்ப்பதாக உள்ளன.