உள்ளூர் செய்திகள்

மகளிரியல் முதுகலை பட்ட படிப்பு

மகளிருக்கான அதிகாரம் அளித்து பொருளாதார உயர்வுக்கு வழி வகுத்தல், பெண்களின் சமுதாய நிலையை ஆராய்தல், பாலின பாகுபாடு அறிதல், கிராமப்புற பெண்களுக்கு சுய தொழில், மற்றும் பாதுகாப்பான வேலை வாய்ப்புக்கு வழி வகுத்தல், பெண்களின் ஆளுமை பண்பினை உயர்த்துதல், சுயமாக சிந்தித்து முடிவெடுத்து செயல்படுதல், பெண்களின் உரிமைகளை நிலை நாட்டுதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை இத்துறையின் நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறது. இது தொடர்பாக துறையின் இயக்குனர் ஜெயரத்தினம் கூறியது. தொழிற்சாலை உறவுகள் மற்றும் தொழிலாளர் நலன் என்ற டிப்ளமோ படிப்பும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டு படிப்பு முடிந்து வெளியே செல்லும் மாணவர்களுக்கு எம்.ஏ., முதுகலை பட்டத்துடன் டிப்ளமோ படிப்பையும் முடித்து செல்கின்றனர். முழு நேர பட்ட மேற்படிப்பு படிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஒரு மாணவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இப்பட்ட படிப்பில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, முழுநேர மாணவ, மாணவிகளுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மிகவும் ஏழ்மையிலுள்ள மாணவர்களுக்கு அரசு கல்வி கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. எம்.ஏ., மகளிரியல் (Womnen Studies) படிப்பிற்கு இளங்கலை முடித்த அனைத்து பிரிவினரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆயிரத்துக்கு மேற்பட்ட பாலின சம்பந்தமான புத்தகங்களும், ஆய்வு கட்டுரைகளும் இத்துறையில் உள்ளன. பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி கல்வி (எம்.பில், பிஎச்.டி.,) பயிற்சி அளித்தல், விரிவாக்கம் ஆகிய பணிகளை இத்துறை செய்து வருகிறது. வேலை வாய்ப்பை பொறுத்த வரை, தேசிய, சர்வதேச நிறுவனம், அரசு சார்ந்த தொண்டு நிறுவனம், மருத்துவமனை ஆலோசகர், தமிழ்நாடு அரசு நலத்திட்டம், மகளிர் திட்ட ஆலோசகர், சமூக சேவகர் போன்ற துறைகளில் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மகளிரியல் துறையின் இதர பணிகள் * தற்போது மகளிரியல் துறையில் கீழ்கண்ட ஆய்வுகள் நடந்து வருகின்றது. * மகளிரின் இனபெருக்க விருத்தி குறித்த ஆரோக்கியம். * பணிபுரியும் பெண்களின் மனவெழுச்சி நுண்ணறிவு. * சுய உதவி குழு மகளிரின் தொழில் முனையும் திறன். * எச்.ஐ.வி.,/எய்ட்ஸ் பற்றி செவிலியருக்கு கொடுக்கும் பயிற்சியின் திறன். * புலம் பெயர்ந்த பெண் குழந்தைகளின் பிரச்னைகள், அதற்கான காரணங்கள். * பெண்களின் மன ஆரோக்கியம். * பாலின தணிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !