உள்ளூர் செய்திகள்

கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற அல்லது சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற எழுத வேண்டிய தேர்வு, 'கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்'.இத்தேர்வு அடிப்படையில் எம்.டெக்., எம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., போன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதோடு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகின்றன. 2026ம் ஆண்டு தேர்வை ஐ.ஐ.டி.,-கவுகாத்தி, இதர ஐ.ஐ.டி.,கள் மற்றும் ஐ.ஐ.எஸ்.சி., உடன் இணைந்து நடத்துகிறது. மேலும், அரசு உயர்கல்வி நிறுவனங்களில் உதவித்தொகையும் வழங்கப்படுகின்றன.தகுதிகள்இத்தேர்வை எழுத அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை, அறிவியல், கலை, வணிகவியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. விண்ணப்ப கட்டணம்ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 25 தேதிக்குள் விண்ணப்பிப்பவர்கள் தாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும். தாமதமாக அக்டோபர் 6ம் தேதி வரை விண்ணப்பிப்பவர்கள் ரூ.2 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும். பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாயும், தாமதமாக செலுத்துபவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பம் துவங்கும் நாள்: ஆகஸ்ட் 28விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 28தேர்வு நாட்கள்: 2026 பிப்ரவரி 7, 8, 14 மற்றும் 15, 2026தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: மார்ச் 19, 2026விபரங்களுக்கு: https://gate2026.iitg.ac.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !