உள்ளூர் செய்திகள்

அறிவோம் ஐ.ஐ.எம்., விசாகப்பட்டினம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் - ஐ.ஐ.எம்., கடந்த 2015ம் ஆண்டு இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது. இக்கல்வி நிறுவனம் ஐ.ஐ.எம்., பெங்களூருவின் வழிகாட்டுதலில் இயங்குகிறது. என்.ஐ.ஆர்.எப்., 2024 தரவரிசையில், இக்கல்வி நிறுவனம் 26வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நோக்கம் *உயர் தர நிர்வாகக் கல்வி வழங்குதல்*சமூக விழிப்புணர்வுடன் கூடிய தலைமைத் திறன்கள் கொண்ட நபர்களை உருவாக்குதல்*தொழில்முனைவோரை ஊக்குவித்து, நாட்டின் வளர்ச்சியில் பங்குபெற உதவுதல்*தொழில்துறை, அரசு மற்றும் சமூகத்துடன் இணைந்து, வளர்ச்சியை ஊக்குவித்தல்*தற்காலிக மற்றும் எதிர்கால தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய, திறமையான நிர்வாகத் தீர்வுகளை உருவாக்குதல்உலகத் தரத்தில் நிர்வாக கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் ஒரு நிறுவனமாக மாறும் நோக்கத்திற்கேற்ப, சமூக நலனைக் கருத்தில் கொண்டு, தொழில் சார்ந்த தலைமைத்திறன் வளர்ச்சி மற்றும் புதுமை சார்ந்த தீர்வுகள் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.படிப்புகள் * இ.எம்.பி.ஏ.,* பி.ஜி.பி.எம்.இஎக்ஸ்., * பி.ஜி.பி.எம்.சி.ஐ.,* இ.பி.ஜி.டி.பி.எம்., * பி.ஜி.பி.,* பி.டி.எப்.,* பிஎச்.டி., * எக்சிகியூட்டிவ் பிஎச்.டி., * சான்றிதழ் படிப்புகள்சேர்க்கை முறைஇந்த நிறுவனத்தில் சேர்வதற்கு, சி.ஏ.டி., தேர்வில் மதிப்பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதற்கு பிறகு, தனிப்பட்ட நேர்காணல், எழுதும் திறன் தேர்வு ஆகியவை நடத்தப்படுகின்றன. விபரங்களுக்கு: https://www.iimv.ac.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !